நம்பூதிரி ஒருவரின் கனவில் சிவன் தோன்றி ஆற்றின் கரையில் கோயில் எடுக்கக் கட்டளை இட்டார் அவர் தன் சொத்துகளை விற்று கோவில் கட்டினார்.
பன்னிரு சிவாலயங்களில் இக்கோயிலில் மட்டும் தான் நந்தி இல்லை. திக்குறிச்சி ஊருக்கு ஒரு முறை காளை ஒன்று வந்தது. ஊருக்கு மிகுந்த தொல்லை கொடுத்தது. ஊர் மக்கள் கல்லை எறிந்து அதை விரட்டிப்பார்த்தனர். அது மிரண்டு எதிர்த்தது. கம்பால் அடித்தனர். இது அறிந்த தரணநல்லூர் நம்பூதிரி அந்தக் காளையைத் தாமிரபரணி ஆற்றின் கரையில் மூழ்கச் செய்தார். அப்போது இக்கோயிலில் இருந்த நந்தி மாயமாகி விட்டது. அதன் பிறகு இக்கோயிலில் நந்தி வைக்க வேண்டாம் என ஊர் மக்கள் முடிவு செய்தனர்.
Specialities
பன்னிரு சிவாலயங்களில் இரண்டாவது கோயில்.
இக்கோயிலில் மார்கழி, சதய நட்சத்திரத்தில் கொடியேற்றம்; 10 நாட்கள் விழா நடக்கிறது. திருவாதிரை நட்சத்திரத்தில் ஆறாட்டு விழா. வேட்டை நிகழ்ச்சியில் யானை ஸ்ரீபலி உண்டு.