தீர்த்தம் : யானைக்குளம், வடக்கே குளம், பற்றுக்குளம், தீர்த்தக்குளம்
வழிபட்டோர்:
Sthala Puranam
பிரணவத்தின் பொருள் தெரியாததால் படைப்புக் கடவுளான பிரம்மனை முருகன் சிறைப்பிடித்து வைத்தான். இந்த இடமே முஞ்சிறை ஆயிற்று. அப்போது பிரம்மனின் முன் தோன்றிய வடிவமே சூலபாணி என்ற ஒரு கதையும் உண்டு.
இராவணன் சீதையைச் சிறை வைத்து முதல் இடம் முன்சிறை என்பது ஒரு கதை
இராமரும் வட்கமணரும் சிதையைக் காணாமல் தேடி வந்தபோது திருமலை சிவபெருமானைக்கண்டு வழிபட்டனர்,
திருமலை நாயக்கரின் தாய் உதிச்சி என்பவர் கட்டிய கோயில் இது என்பது ஒரு செய்தி.
Specialities
இக்கோயில் தரைமட்டத்திலிருந்து 12 மீட்டர் உயரப் பாறையில் உள்ளது.
கல்வெட்டு: இக்கோயிலில் மிக பழைமையான கல்வெட்டு பிரகாரப் பாறையில் உள்ளது. இந்த வட்டெழுத்து கல்வெட்டு கி.பி.9 ஆம் நூற்றாண்டினது. முதல் இராஜேந்திர சோழரின் கல்வெட்டு இக்கோவில் 11ஆம் நூற்றாண்டிலேயே திருமலை என வழங்கப்பட்டதைக் குறிப்பிடும். இதே காலத்தில் இக்கோயிலை நிருவகிக்க ஒரு சபை இருந்ததும் தெரிகிறது.
இக்கோயிலில் மாசி மாதம் கும்பாஷ்டமி . கார்த்திகை மாதம் விருச்சிகாஷ்டமி, பிரதோஷம் போன்ற விழாக்களும் திருவாதிரை ஆயில்யம் நட்சத்திரங்களில் பூஜைகளும் கிருததாரையும் நடக்கின்றன. பங்குனி, புரட்டாசி மாதங்களில் மகாதேவர் கோயிலிலும், விஷ்ணு கோயிலிலும் கொடியேற்று ஆரம்பித்து பத்து நாட்கள் விழா நடக்கிறது.