logo

|

Home >

hindu-hub >

temples

திருநயினார்குறிச்சி கறைகண்டேஸ்வரர் திருக்கோயில்

இறைவர் திருப்பெயர்: கறைகண்டேஸ்வரர்

இறைவியார் திருப்பெயர்:

தல மரம்:

தீர்த்தம் : வள்ளியாறு

வழிபட்டோர்:

Sthala Puranam

  • பாற்கடல் கடைந்த விஷத்தை சிவபெருமான் அருந்தினார். பார்வதி அவர் கழுத்தில் வைத்து பிடித்தாள். அதனால் விஷம் (கறை) கழுத்தில் (கண்டம்) நின்றது. சிவபெருமான் கறைகண்ட ஈஸ்வரன் எனப்பட்டார். ஈஸ்வரன் குடி கொண்ட இடம் இது. 
     

Specialities

  •  வள்ளியாற்றங்கரையில் இருக்கும் கிராமம்
  • கடற்கரையில் பாறையில் குடைவரைக்கோயில் தோண்டும் முயற்சி பாதியில் நின்றதன் அடையாளம் உண்டு. இந்த குடைவரையின் அருகே ஒரு பாறையில் நடராஜரின்
    புடைப்பு சிற்பம் உள்ளது. இதன் அமைப்பின் படி கி.பி 7 அல்லது 8 ஆம் நூற்றாண்டினது 
  • ஸ்ரீகோவில்  சோழர் பாணி.
  • ரிஷப மண்டபத்துக்கு (முகப்பு மண்டபம்) ஏறும் சோபனப்படி வேலைப்பாடு உடையது.
  • கல்வெட்டுகள்:
    இக்கோயிலில் பத்து கல்வெட்டுகள் உள்ளன. இவற்றில் காலத்தால் பழையது 1127 ஆம் ஆண்டினது. பழைய கல்வெட்டு கடிகைப் பட்டணத்து உடையார் கறைகண்டேஸ்வரமுடைய மகாதேவர் எனக் கூறும். 
    கோயில் கருவறை தெற்குப்பக்க சுவரில் 1139 ஆம் ஆண்டு கல்வெட்டும் இதே இடத்தில் 1227 ஆம் ஆண்டு கல்வெட்டும் உண்டு. இதனால் கட்டுமானம் 12 ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டது என யூகிக்கலாம். 15 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு கோயில் பலிபீடம் அமைத்ததைக் கூறும். 1706 ஆம் ஆண்டு கல்வெட்டு சோபன மண்டபம் அமைத்ததைக் கூறும்.
    கல்வெட்டுகளில் கோயில் நடம் விழாக்கள் பற்றிய தகவல்கள் உள்ளன. மாத அஷ்டமி விழா (கி.பி.1139) சித்திரை விழா (1163 ஆம் ஆண்டு) ஆடி விழா ( 1706) ஆகியவை நடத்த நிபந்தம் கொடுக்கப்பட்டிருக்கிறது. 1163 ஆம் ஆண்டு கல்வெட்டு சித்திரை மாதம் ஒரு நாடகம் நடத்தவும், வாகனம் உலா வரவும் நிபந்தம் கொடுத்ததையும் கூறும். 1432 ஆம் ஆண்டு சித்திரை மாதம் 26ம் தேதி இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடந்ததை ஒரு கல்வெட்டு கூறும்.
     

Contact Address

Related Content