logo

|

Home >

hindu-hub >

temples

தெரிசனங்கோப்பு இராகவேஸ்வரர் திருக்கோயில்

இறைவர் திருப்பெயர்: இராகவேஸ்வரர்

இறைவியார் திருப்பெயர்: உலக நாயகி

தல மரம்:

தீர்த்தம் : பழையாறு

வழிபட்டோர்:இராமன்

Sthala Puranam

  • இராமன் தாடகையை வதம் செய்தபோது வில்லை ஊன்றி நின்ற இடம் இவ்வூர் என்பது கதை.Derisanamcope Ragaveshwarar Temple Vimanam இவ்வூர் அருகே உள்ள மலையின் பெயர் தாடகை மலை. இராமன் தாடகையை வதம் செய்த பிறகு ஸ்திரீஹத்தி தோஷம் தீர இக்கோயில் சிவனை வழிபட்டார்.

Specialities

  • நாஞ்சிநாட்டு தேவதானம் திருவரன்கோப்பு தெரிசனங்கோப்பு என ஆனது.
  • பழையாற்றின் கரையில் உள்ள முக்கிய கோயில்களில் ஒன்று.
  • சுவாமி, அம்பாள் கோயில்கள் தரைமட்டத்தில் இருந்து இரண்டரை மீட்டர் உயர மேடையில் உள்ளன. 
  • கல்வெட்டுகள்
    இக்கோயிலில் ஐந்து கல்வெட்டுகள் காணப்படுகின்றன. முதல் ராஜராஜனின் எட்டாம் ஆட்சி ஆண்டு கல்வெட்டும், ராஜராஜனின் 10-ஆம் ஆட்சி ஆண்டு கல்வெட்டும் உள்ளது. பிற கல்வெட்டுகள் 1558, 1618, 1623 ஆண்டினவை.
    முதல் ராஜராஜனின் கல்வெட்டு 10-ஆம் நூற்றாண்டினது. இது ஸ்வஸ்திஸ்ரீ காந்தளூர்சாலை கலமறுத்து அருளி கோப்பரகேசரி நாஞ்சிநாட்டு தேவதானம் திருவரன்கோப்பில் கருவறை தேவர்க்கு நிபந்தம் அளித்ததைக் கூறும். 
    இரண்டாம் கல்வெட்டு இராஜராஜன் 10-ஆம் ஆட்சியாண்டினது. இது வட்டெழுத்துக் கல்வெட்டு. இந்த நிபந்தக் கல்வெட்டின்படி இக்கோயிலுக்கு ஒரு சபை இருந்தது தெரிகிறது.
    1618-ஆம் ஆண்டு கல்வெட்டு இக்கோயிலில் பூரட்டாதி நட்சத்திரத்தில் விஷேச பூஜை நடந்ததைக் கூறும். 
    சிவன் கோயில் கருவறையில் 1558-ஆம் ஆண்டு கல்வெட்டு நிபந்தக் கல்வெட்டு. அம்மன் கோயில் கல்வெட்டு, கடியப்பட்டிணம் இராகவன் என்பவர் அர்த்தஜாம பூஜை நடத்த நிபந்தம் அளித்ததைக் கூறும்.
  • திருவிழா: சித்திரை மாதம் புணர்பூச நட்சத்திரத்தில் கொடியேறி 10 நாட்கள் திருவிழா. பௌர்ணமியில் ஆறாட்டு. 9-ஆம் நாள் தேர் திருவிழா.

Contact Address

Related Content

அகத்தீச்சுரம் அகஸ்தீஸ்வரமுடைய நயினார் திருக்கோயில்- (அகத்தீஸ

திருவிடைக்கோடு சடையப்பர் (மகாதேவர்) ஆலயம்

சுசீந்திரம் தாணுமாலயன் திருக்கோயில்

கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் திருக்கோயில் (Kanyakumari Guhanat

நாகர்கோவில் சோழராஜா மஹாதேவர் திருக்கோயில்