logo

|

Home >

hindu-hub >

temples

நாகர்கோவில் தழுவிய மகாதேவர் திருக்கோயில்

இறைவர் திருப்பெயர்: தழுவிய மகாதேவர், தளியல் மகாதேவர் ஞானாதீஸ்வரர், வடசேரி நயினார் தளியல் ஞானாதீஸ்வரமுடையார்

இறைவியார் திருப்பெயர்: ஆவுடையம்மான்

தல மரம்:

தீர்த்தம் :

வழிபட்டோர்:

Sthala Puranam

  • தழுவிய மகாதேவரை ஜுர தேவர் என்று சொல்வது இங்குள்ள மரபு.
  • இந்த சிவன் கோயிலுக்கு இளம் பெண் ஒருத்தி தினமும் பால் கொண்டு வருவாள். ஒரு நாள் அவள்
    கருவறை அருகே பால் செம்பை வைத்தபோது அவளை சிவபெருமான் ஆட்கொண்டார். அங்கே அவள் அம்மனாக வழிபாடு பெற்று வருகிறாள்.

Specialities

  • பழையாறு இதன் அருகே ஒடுகிறது.
  • இக்கோயில் இருக்கும் பகுதி பேச்சுவழக்கில் தடிமார் கோயில் என அழைக்கப்படுகிறது,
  • கருவறை கட்டுமானம் பழையது. கி.பி. 14ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டது.
  • கருவறையின் மேல் உள்ள விமானம் நாகர வடிவு. இதன் நான்கு திசைகளிலும் இந்திரன் உட்பட நால்வரும் உள்ளனர். விமான நான்கு மூலைகளில் பூதம் தாங்குகிறது.
  • தெற்கு உட்பிரகாரத்தில் வடக்கு நோக்கி ஜுர தேவர் இருக்கிறார். கருவறை மட்டுமே கொண்ட சிறு கோயில். கன்னியாகுமரி மாவட்ட திருக்கோயில்களில் ஜுர தேவர் வழிபாடு தெய்வமாக உள்ள கோயில் இது ஒன்றே. இது கல் படிமம், நின்ற கோலம் மூன்று தலைகள், ஒன்பது கண்கள்; நான்கு கைகள்,மூன்று கால்கள். ஜுர தேவரை வழிபடுபவருக்குக் கடும் ஜுரம் வராது. கபம் தொடர்பான வியாதிகள் வராது என்பது நம்பிக்கை.
  • கல்வெட்டுகள்:
    இக்கோயில் முன்மண்டபம் தெற்கு பக்கச் சுவரில் ஒரு கல்வெட்டு காணப்படுகிறது. இது கி.பி.1532 ஆம் ஆண்டில் வேணாட்டு அரசன் உதயமார்த்தாண்டவர்மா காலத்தது. இந்த அரசன் களக்காட்டில் அரண்மனை அமைத்திருந்தபோது வெட்டப்பட்ட கல்வெட்டு இது. நாஞ்சில் நாட்டு சுசீந்திரம் ஊரில் வாழும் கொதுகுல சபை சமூகத்தைச் சார்ந்த ஆரீயன் கொத்தன் என்பவனை இக்கோயிலுக்கு கணக்கனாக நியமித்ததை இக்கல்வெட்டு கூறும். இதில் இக்கோயில் வடசேரி நயினார் தளியல் ஞானாதீஸ்வரமுடையார் கோயில் என குறிப்பிடப்படுகிறது. தளி என்பது கல்கோயிலைக் குறிக்கிறது. அதனால் 16 ஆம் நூற்றாண்டிற்கு முன்பே இக்கோயில் கல்கோவிலாக இருந்திருக்கலாம். இக்காலத்தில் இந்த சிவன் தளியல் மகாதேவர் ஞானாதீஸ்வரர் என அழைக்கப்பட்டிருக்கிறார்.
  • திருவிழா:
    மார்கழி மாதம் திருவாதிரையில் பத்தாம் திருவிழா வரும்படி முதல் நாள் திருவிழா ஆரம்பமாகும். கொடிமரம் இல்லை. முதல் நாளில் முளையிடுதல் சடங்கு பிரதானம். பத்து நாட்களிலும் மாணிக்கவாசகர் ஸ்ரீ பலியில் கொண்டு செல்லப்படுகிறார். தை மாதம் உத்திர நட்சத்திரத்தில் திருக்கல்யாண விழா நடக்கிறது.

Contact Address

Related Content

அகத்தீச்சுரம் அகஸ்தீஸ்வரமுடைய நயினார் திருக்கோயில்- (அகத்தீஸ

திருவிடைக்கோடு சடையப்பர் (மகாதேவர்) ஆலயம்

சுசீந்திரம் தாணுமாலயன் திருக்கோயில்

கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் திருக்கோயில் (Kanyakumari Guhanat

நாகர்கோவில் சோழராஜா மஹாதேவர் திருக்கோயில்