இறைவர் திருப்பெயர்: திருவாலீஸ்வரர்
இறைவியார் திருப்பெயர்: சௌந்தரவல்லி
தல மரம்:
தீர்த்தம் : வாலி தீர்த்தம்
வழிபட்டோர்:வாலி
Sthala Puranam
இவ்வூர் "அசலபுரம்" என்ற பெயரிலே விளங்கி நாளடைவில் அரசூர் ஆனது. அரசூர் அ/மி ஸ்ரீசௌந்தரவல்லி சமேத அ/மி ஸ்ரீதிருவாலீஸ்வரர் திருக்கோயில், ஸ்ரீவாலியினால் பூசிக்கப்பட்ட தலமாகும். சிவலிங்கத் திருமேனி 16 பட்டைகள் கொண்ட "தாராலிங்க"மாக அமையப்பெற்றுள்ளது. இத்தல தீர்த்தம் வாலி தீர்த்தமாகும்.
Specialities
புராண வரலாற்றுக்குப்பின் முதலாம் நரசிம்மவர்மன் (630 - 668) ஆட்சிக்குப்பின் வந்த இரண்டாம் நரசிம்மன் என்ற இராஜசிம்மன் (700 - 728) காலத்தில் இக்கோயிலின் அதிட்டானம் முதல் விமானம் வரை முழுவதும் கல்லினால் ஆக்கப்பட்டன. இவரது காலத்தில் தான் அகமண்டபம் - முகமண்டபம் - ஸ்ரீசௌந்தரவல்லி அம்மன் சன்னதி திருச்சுற்று, மதில், கோபுரவாசல் ஆகியனவெல்லம் கட்டப்பெற்றது.
Contact Address