logo

|

Home >

hindu-hub >

temples

காயாரோகணம் காயாரோகணேஸ்வரர் திருக்கோவில்

இறைவர் திருப்பெயர்: காயாரோகணேஸ்வரர்.

இறைவியார் திருப்பெயர்:

தல மரம்:

தீர்த்தம் :

வழிபட்டோர்:வியாழன்பகவான் (குரு), மகாலட்சுமி.

Sthala Puranam

  • இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
  • பிரம்மனுக்கும், திருமாலுக்கும் தத்தம் காலப்பதம் முடிவுற்றதும் நிலையின்றிப்போக, சிவபெருமான் தோன்றி அவர்களின் திருமேனிகளைத் தன்தோளில் தாங்கி இவ்விடத்து நடனமாடி அருள்செய்தார். அவர்களின் காயத்தை (காயம் - உடம்பு) தன்னுள் ஆரோகணித்துக் கொண்டமையால் இத்தலம் 'காயாரோகணம்' எனப் பெயர்பெற்றது.

  • மகாலட்சுமி இத்தலத்து இறைவனை வில்வத்தால் அருச்சித்துத் திருமாலைத் தன் கணவனாகப் பெற்றாள்.
  • வியாழ(குரு)பகவான் இங்கு இறைவனை வழிபட்டு, சிவபெருமானின் திருவடியில் மாறாத அன்பு வாய்க்கப் பெற்றார்.
  • குரு, மகாலட்சுமி வழிபாடுகளால் வழிபடுவோருக்கு முறையே ஞானமும், செல்வமும் காயாரோகணப் பெருமானின் அருளால் வாய்க்கப்பெறும் என்பது காஞ்சிபுராணம்.

Specialities

kAyArOkaNam temple

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு காஞ்சிபுரத்தில் - தாயார்குளத்தின் பக்கத்தில் வேகவதியின் கரையில் அமைந்துள்ள கோயிலாகும்.

Related Content

ஓணகாந்தன்தளி (காஞ்சிபுரத்தில் உள்ள திருக்கோயில்) தலவரலாறு

கச்சிமயானம் - (காஞ்சிபுரம்) Kacchimayanam - (Kanchipuram)

குமரகோட்டம்

லகுளீசம் (தவளேஸ்வரம்)

லிங்கபேசம் (காமக்கோட்டம்)