துர்வாச முனிவரின் சாபத்தால், இரண்டு அரச குமாரர்கள் கழுகு உருவை அடைந்து, பின்னர் இவ்வாலயத்து இறைவனைப் பூசித்து, சாப விமோசனம் அடைந்தனர். கழுகுகள் ஸ்னானம் செய்த குளம் பறவைகுளம் எனப்படுகிறது.
இவ்வூரின் கண் வாழ்ந்த சீலவதி அம்மையார் என்பவரின் பக்தியை சிறுத்தொண்டருக்குக் காட்டியதாக ஒரு செய்தி உண்டு. இவர் மற்றும் சிவனடியார்கள் ஸ்னானம் செய்த குளம் முனிகுளம் எனப்பட்டது.
இறைவன் ஸ்னானத்திற்கான குளம் அப்பன் குளம் எனப்படுகிறது.
Specialities
கழுகு சிவலிங்கத்தைப் பூசிக்கும் காட்சி லிங்கோத்பவரின் கோஷ்டத்தின் மேல் செதுக்கப் பட்டுள்ளது
Contact Address
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
நாகை மாவட்டம், மயிலாடுதுறை வட்டம், மயிலாடுதுறையிலிருந்து 0.5-km