logo

|

Home >

hindu-hub >

temples

சர்வதீர்த்தம் ஏகாம்பரநாதர் திருக்கோவில்

இறைவர் திருப்பெயர்: ஏகாம்பரநாதர்

இறைவியார் திருப்பெயர்:

தல மரம்:

தீர்த்தம் :

வழிபட்டோர்:அனைத்துத் தீர்த்தங்களும்.

Sthala Puranam

sarvathIrththam

  • இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
  • இத்திருக்குளத்தின் பெருமையைக் காஞ்சிபுராணம் "சருவதீர்த்தப் படலம்" என்று தனிப்படலமாகவே வைத்துப் போற்றிப் புகழ்கிறது.
  • இத்திருக்குளம் மிகவும் பிரசித்தி பெற்றத் திருக்குளமாகும். காசிவிசுநாதர், ராமேஸ்வரர் முதலிய அநேக கோயில்கள் இதன்கரையில் அமைந்துள்ளன.

  • சிறப்புப் பெற்ற முத்திமண்டபமும் இத்திருக்குளத்தின் கரையில் அமைந்துள்ளது.
  • அம்மையின் மன உறுதியை உலகம் அறியும் பொருட்டு இறைவனார் நதிகளை அழைத்தபோது, எல்லாத் தீர்த்தங்களும் திரண்டு, நதியுருவம் பூண்டு காஞ்சிக்குப் பிரவாகங்கொண்டு வந்தன. இப்பெரும் வெள்ளத்திற்கு அஞ்சிய அம்பிகை பெருமானைக் காக்கும் பொருட்டு தாம் அமைத்த மணல் லிங்கத்தை (திருவேகம்பத்துப் பெருமானை) ஆரத்தழுவி, கைளாற் பற்றிக் காத்தார். இதன் காரணமாகவே திருவேகம்பர் தழுவக் குழைந்தவராகி, அம்மையின் வளைத்தழும்பும், முலைச்சுவடும் திருமேனியில் ஏற்றார். அதன்பின்னர் அனைத்துத் தீர்த்தங்களும் இங்கியே தங்கி இறைவனை தீர்த்தேஸ்வரர் என்ற பெயரில் வழிபட்டன. இவ்வழிபாட்டை அனைத்துத் தீர்த்தங்களும் செய்தமையினால் இதுவே சர்வதீர்த்தம் எனப் பெயர் பெற்றது.

  • இறைவன் நதிகளின் வழிபாட்டினை மெச்சி வெளிப்பட்டு "உம்மிடத்தில் (சர்வதீர்த்தத்தில்) நீராடி எம்மை வழிபட்டு, தேவர்கள் முதற்கொண்டு பித்ருக்கள் ஈராக உள்ளோருக்கு தர்ப்பணம் செய்து தானம் தந்து வணங்குவோருக்கு யாம் முத்திப்பேற்றை அருளுவோம். மேலும் உம்மிடத்தில் நீராடியோர் பல பாவங்களினின்றும் நீங்கப் பெறுவர். அத்துடன் உம்மில் நீராடி எம்மை (ஏகாம்பரநாதர்) வணங்குவோர் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நால்வகைப் பயன்களும் பெற்று, தாயின் வயிற்றில் புகாது எம் திருவருளில் வாழ்ந்து மகிழ்வர்" என்று அருளினார் என்பது தலவரலாறாகும்

Specialities

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு காஞ்சிபுரம் - வேலூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள பெரியகுளம்

Related Content

ஓணகாந்தன்தளி (காஞ்சிபுரத்தில் உள்ள திருக்கோயில்) தலவரலாறு

கச்சிமயானம் - (காஞ்சிபுரம்) Kacchimayanam - (Kanchipuram)

குமரகோட்டம்

லகுளீசம் (தவளேஸ்வரம்)

லிங்கபேசம் (காமக்கோட்டம்)