இறைவர் திருப்பெயர்: சாந்தாலீஸ்வரர்
இறைவியார் திருப்பெயர்:
தல மரம்:
தீர்த்தம் :
வழிபட்டோர்:வியாசர்
Sthala Puranam
வியாசர் கலியுகம் வருதை உணர்ந்து அச்சங்கொண்டு, காசி சென்று விசுவநாதரை வழிபட்டிருந்தார். அவ்வேளையில் அங்குள்ள முனிவர்களின் வேண்டுகோளின்படி, வேதம் முதலியவற்றின் பொருளை அவர்களுக்கு உபதேசித்தார். உபதேசம் கேட்டுகொண்டிருந்த முனிவர்கள், வேதத்தின் முடிந்த பொருளை ஒரு வார்த்தையில் எடுத்துக் கூறுமாறு வேண்டினர். இப்போது வியாசர் தான் முன்பு சொன்னவற்றுக்கு மாறாக, "நாராயணனே பரப்பிரம்மம்" என்றார். மாறான விளக்கத்தைக் கேட்ட முனிவர்கள் திகைப்புற்றனர். மேலும் அவர்கள், அவர் கூறியதை விசுவநாதர் கோயிலில் வந்து சொல்லுமாறு கூற, வியாசரும் அதன்படியே விசுவநாதர் கோயிலில் வந்து நின்று இருகைகளையும் உயர்த்தியவாறே "நாராயணனே பரப்பிரம்மம்" என்றார். இதைக்கேட்டு கோபங்கொண்ட நந்தியம்பெருமான், வியாசரை அப்படியே சபித்தார். சாபத்தால் வியாசருடைய உயர்த்திய இரு கைகளும் அப்படியே மேலேயே நின்று போயின. வியாசர் திருமாலை வேண்ட, திருமாலும் அவர்முன் தோன்றி, அவரின் தவறான உபதேசத்திற்கு வருந்தி வியாசரைப்பார்த்து சிவபெருமானை சரணடையச் சொன்னார். மனம் தௌ¤ந்த வியாசர், காஞ்சி வந்து, ஏகம்பநாதரைப் பணிந்து போற்றி சார்ந்தாசயப் பெருமானைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டுப் பேறு பெற்றார் என்பது தலவரலாறு.
Specialities
Contact Address