logo

|

Home >

hindu-hub >

temples

முப்புராரி கோட்டம் ஈயப்பிள்ளையார்கோயில் மண்டபம்

இறைவர் திருப்பெயர்: முப்புராரீசர்

இறைவியார் திருப்பெயர்:

தல மரம்:

தீர்த்தம் :

வழிபட்டோர்:சுதன்மன், சுசீலன், சுபத்தி ஆகியோர்.

Sthala Puranam

  • இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
  • எயிற்கோட்டம் என்பது மருவி முறையே ஈயக்கோட்டம் - ஈயக்கோஷ்டம் - ஈயக்கோஷ்டேசுவரர்கோயில் என்றாகி தற்போது ஈயப் பிள்ளையார்கோயில் மண்டபம் என்பது வழங்குகிறது.

  • திரிபுரத்தவர்களை புத்தன் மயக்கிய காலத்தில், சுசீலன், சுபத்தி, சுதன்மன் ஆகிய மூவரும் மயங்காது இருந்து சிவபெருமானைத் துதித்து நின்றனர்; இறைவன் காட்சி தந்து யாதென வினம்ப, மூவரும் இறைவனின் கோயில் வாயில்காக்கும் பணியை வேண்டி நின்றனர். இறைவனும் அவர்களை காஞ்சிக்கு சென்று தம்மை வழிபடுமாறு பணித்தார். அவர்கள் மூவரும் அவ்வாறே காஞ்சிக்கு சென்று முப்புராரீசன் என்ற திருப்பெயரில் சிவலிங்கம் நிறுவி வழிபட்டு பேறடைந்தனர் என்பது வரலாறு

Specialities

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு காஞ்சிபுரம் - பெரிய காஞ்சிபுரத்திலிருந்து 'கீழம்பி' செல்லும் சாலையில் 3 கி.மீ. சென்றால் இக்கோயிலை அடையலாம்

Related Content

ஓணகாந்தன்தளி (காஞ்சிபுரத்தில் உள்ள திருக்கோயில்) தலவரலாறு

கச்சிமயானம் - (காஞ்சிபுரம்) Kacchimayanam - (Kanchipuram)

குமரகோட்டம்

லகுளீசம் (தவளேஸ்வரம்)

லிங்கபேசம் (காமக்கோட்டம்)