இறைவர் திருப்பெயர்: கயிலாசநாதர்
இறைவியார் திருப்பெயர்:
தல மரம்:
தீர்த்தம் :
வழிபட்டோர்:
Sthala Puranam
ஸ்தல யாத்திரையாக நாகைக்கு வந்த பராசர முனிவர்க்கு பதினாறாயிரம் சிகரங்கள் கொண்ட கயிலையங்கிரியைத் தரிசிக்கும் ஆவல் வந்தது. அதிலும், அம்மலையை நாகையிலே தரிசிக்கவேண்டும் என்ற பேராவல் ஏற்பட்டது. ஒரு பட்டை ஆயிரம் சிகரங்களுக்கு சமம் என்ற நோக்கில் பதினாறு பட்டைகளை உடைய பாணத்தோடு கூடிய சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தார். அப்பெருமானை ஒரு உயர்ந்த கட்டுமலையில் வைத்து வழிபாட்டு வந்தார். அதன் பயனாக நீண்ட ஆயுள் பெற்றுப் பின்னர் கைலைநாதனின் கழலடி அடைந்தார்
Specialities
இக்கோயிலில் இராஜ கோபுரம் இல்லை; சுதை வடிவங்களாக ரிஷப வாகனத்தில் சுவாமியும் அம்பாளும் காட்சி அளிக்கிறார்கள்; இருபுறமும் கணபதியும் கந்தனும் காட்சி தருகிறார்கள்.
மாடக்கோயிலின் கீழே நந்தியும் பலிபீடமும் அமைந்துள்ளன. மேலே பதினெட்டுப் படிகள் ஏறிச் சென்றால் சுவாமி சன்னதியை அடையலாம்.
பதினாறு பட்டை லிங்கமாக கைலாசநாதப் பெருமான் தரிசனம் தருகிறார்.
Contact Address