logo

|

Home >

hindu-hub >

temples

நாகப்பட்டிணம் - அழகியநாதர் திருக்கோயில் தல வரலாறு

இறைவர் திருப்பெயர்: அழகியநாதர்

இறைவியார் திருப்பெயர்: சௌந்திரவல்லி

தல மரம்:

தீர்த்தம் : அம்ருத புஷ்கரணி.

வழிபட்டோர்:

Sthala Puranam

  • இக்கோயில், ஒரு அழகிய கற்றளி. மொட்டை ராஜகோபுர வாசலின் மேல் கணபதியும் கந்தனும் இருபுறமும் நிற்க காட்சிகொடுத்த நாதர் ரிஷபத்தின் மீது சாய்ந்தவாறு அம்பிகையுடன் நமக்குத் தரிசனம் தருகிறார்.

  • திருப்பாற்கடலைக் கடையும் போது ஆலகால விஷம் வெளிப்பட்டதால் திருமாலின் மேனி கருமை நிறமாக மாறியது. மீண்டும் தனது அழகைப் பெறுவதற்காக விஷ்ணு நாகைக்கு வந்து லிங்கப்ரதிஷ்டை செய்து, அதன் மேற்கில் அம்ருத புஷ்கரணி என்ற தீர்த்தத்தை உண்டாக்கி வழிபட்டு வந்தார். ஈசனும் அவருக்குக் காட்சி அளித்து, "நீ கரிய நிறத்தவனாக இருப்பினும் அழகைப் பெறுவாய்" என்று வரமளித்தார். இவ்வாறு தனது அழகை மீண்டும் பெற்ற திருமால், சௌந்தரராஜப்பெருமாள் என்ற திருநாமத்துடன், இக்கோயிலின் தென்மேற்குத் திசையில் கோயில் கொண்டுள்ளார்

Specialities

  • கருவறையில் சற்று உயரத்தில் அழகிய நாதர் பொலிவுடன் காட்சியளிக்கிறார்.

  • அம்பிகை, சௌந்தரவல்லி என்ற பெயரோடு தன் அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லியாகத் தனிச் சன்னதி கொண்டு விளங்குகிறாள்

Contact Address

அமைவிடம் அ/மி. அழகியநாதர் திருக்கோயில், நாகப்பட்டினம் - 611 001. தமிழ்நாடு, நாகப்பட்டினம் மாவட்டம் நாகப்பட்டிணம் இரயில் நிலையதிலிருந்து, இக்கோவில் 2-கி.மீ. தூரத்தில் உள்ளது. சென்னை, கும்பகோணம், தஞ்சாவூர், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, மயிலாடுதுறை முதலிய இடங்களிலிருந்து பேருந்து வசதி உள்ளது

Related Content

நாகப்பட்டிணம் - நாகநாதர் திருக்கோயில் தல வரலாறு

நாகப்பட்டிணம் - அக்கரைகுளம் ஸ்ரீசுந்தரேஸ்வரர் திருக்கோயில் த

நாகப்பட்டிணம் - விசுவநாதர் திருக்கோயில் தல வரலாறு

நாகப்பட்டிணம் ஸ்ரீஅமரரேந்திரேஸ்வரர் திருக்கோயில் தல வரலாறு