இறைவர் திருப்பெயர்: | மன்னீசுவரர். |
---|---|
இறைவியார் திருப்பெயர்: | அருந்தவச்செல்வி. |
தல மரம்: | |
தீர்த்தம் : | |
வழிபட்டோர்: |
அன்னி என்ற வேடன் வள்ளி கிழங்கு வெட்டும்போது, மண்ணுக்குள் மறைந்திருந்த சிவலிங்கத்தை வெட்டி விட்டான். அவனது செயலை மன்னித்தாலும், 'மன்' நிலை பெறுதல் என்ற பொருளில் என்றும் உள்ள பெருமானாகவும் இருப்பதால், இறைவன் மன்னீசுவரர் என்று திருநாமம் பெற்று விளங்குகிறார்.
இக்கோயில் தி. மு. 2000 வருடத்திற்கு முற்பட்ட கோயிலாகும்.
மூலவர் சிவலிங்கத் திருமேனி; மிகப் பெரிய மூர்த்தம்.
அன்னியூர்த் தலபுராணம் சிரவணபுரம் தவத்திரு கந்தசாமி சுவாமிகளால் இயற்றப்பட்டது.
இக்கோயிலில் 50க்கும் மேற்பட்ட கல்வெட்டுக்கள் உள்ளன.
திருமுருகன் பூண்டி கல்வெட்டில் இவ்வூரை "மேற்றலைத் தஞ்சாவூரான மன்னியூர்" என்று குறிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது
அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு கோயம்புத்தூர் மாவட்டம், அவிநாசியிலிருந்து 19 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது.