logo

|

Home >

hindu-hub >

temples

தாழமங்கை (தாயமங்கலம்) - பசுபதிகோயில்

இறைவர் திருப்பெயர்: சந்திரமௌலீஸ்வரர்

இறைவியார் திருப்பெயர்: இராஜராஜேஸ்வரி

தல மரம்:

தீர்த்தம் :

வழிபட்டோர்:சப்த மங்கையரில் ஒருவர், சந்திரன், சாயாதேவி, அகத்தியர், இராஜராஜன் சோழன்.

Sthala Puranam

entrance view of temple

 

  • ஒரு யுகத்தில் தாழைவனமாக விளங்கிய இத்தலத்தில், நாகங்கள் நிறைந்த தாழையடியில் கடுந்தவம் புரிந்த சந்திரனின் பத்தினி, தட்சனின் சாபத்திலிருந்து சந்திரன் விடுபடத் தக்க பரிகாரங்களை இத்தலத்தில் பெற்றாள்.

     

  • இத்தலத்தின் தொன்மை பெயர் தாயமங்கலமாகும். மங்கலம் என்ற பெயரில் அமைந்த ஊர்களை மங்கை என்று வழங்குவதாலும், சப்த மங்கையரில் ஒருவர் வழிபட்டதாலும் இத்தலம் தாழமங்கை என்றாயிற்று.

  •  

    இத்தலத்திற்கு வந்த இந்திராணி, சந்திரமௌலீச்வரனான இறைவனை நோக்கித் தவம் செய்து, அவனருள் பெற்றுக் காளிதேவிக்குத் துணையாக அசுரர்களிடம் போரிடச் சென்றாள் என்பது வரலாறு.

  • ""சித்திரைச் சதயம் முத்தித்திறத் தழையம்" என்பது சித்தர்களின் பொய்யா வாக்கு! அதாவது சிறு எள் மணி வித்தில் மறைந்திருக்கும் மணமுள்ள தைலம் போல் சித்திரைச் சதய நாளில்தாழமங்கை சிவமூர்த்திக்கு இடும் சந்தனக் காப்பானது, யோக வேத மந்திர வழிமுறைகளில் நல்முக்தித் திறத்துக்கு வித்தாகித் தழைத்து நன்கு விருத்தியாகி முந்தைய, வளரும், வருங்கால ஆகிய முச்சந்ததிகளின் சுபிட்ச வளத்திற்கும் தீர்க்கமாக நிலைபெற்று அருளும் என்பது பொருளாகும். தழையம் என்றால் எப்போதும் வளமாக இருப்பதாகும்.

  •  

    சதய நட்சத்திரத்தில் பிறந்த ராஜராஜ சோழன் மாதந்தோறும் சதய நட்சத்திரம் வரும் நாளன்று இங்கு தரிசனம் செய்து, சுவாமிக்கும் அம்பாளுக்கும் சந்தனம், குங்குமம் போன்ற  வாசனாதி திரவியங்கள் சார்த்தி வழிபட்டதாகக் கூறுவர்.

  • இத்தாழமங்கைத் திருத்தலத்திற்கு சந்திரனும், அவனது மனைவி சாயாதேவியும் தம்பதியராக வந்து, தம் கரங்களால், சந்தனம் அரைத்து சித்திரை சதய நாளில் சிவலிங்கத்திற்கு சார்த்தி சிவ தரிசனம் பெற்றனர்.

  •  

    மங்களத்தைத் தரவல்ல மஞ்சள்,குங்குமம்,சந்தனம் ஆகியவற்றின் உற்பத்திக்கு ஆதி வித்தாக இருந்து ஸ்ருஷ்டிக் காலத்தில் அம்பிகை விளங்கிய அற்புதத் தலம் இது. 

  • ஆண்டுதோறும் வைகாசி விசாக பௌர்ணமி நாளில் சந்திரன் உட்சத்தில் இருக்கும் நேரத்தில் இவ்விறைவனை பூஜிக்கும் நிகழ்வு நடைபெறுகின்றது.

  • காசி நகரிலிருந்து வந்த தம்பதிகளான நாத சன்மா – அனவித்தை இருவரும் இத்தலத்தை அடைந்து  வழிபட்டபோது அம்பாள் அவர்களுக்குத் தெரிவை வடிவில் பேரன்னையாகத் தரிசனம் தந்தாள்.

Specialities

view of vimAnA

 

  • தஞ்சாவூர் ஸ்ரீ ப்ரகதீஸ்வரர் திருக்கோயிலில் பெருநந்தியை முறையாகப் பிரதிஷ்டை செய்ய இயலாது இராஜராஜ சோழன் தவித்தபோது, கருவூர்ச்சித்தர், இராஜ குடும்பத்தாருடன் இத்தலத்திற்கு வந்து அனைவரும் சந்தனம் அரைத்து சுவாமிக்கும், அம்பாளுக்கும் சார்த்திப் பதினாறு உருண்டைகளாக்கி, சந்திரனுக்குப் பதினாறு கலைகளைத் தந்ததன் உட்பொருளாக எடுத்டுச் சென்று இறையாணையாகத் தம் உமிழ்த் தீர்த்தத்தால் பல மூலிகாபந்தனங்களுடன் கோளமாக்கித் தஞ்சை பெருநந்தியை நிலைபெறச் செய்யத் துணை புரிந்த அற்புதத் தலமே இத்தாழமங்கைத் தலமாகும்.

     

  • மாதந்தோறும் அமாவாசையில் இருந்து மூன்றாவது நாளாகிய சந்திர தரிசன நாளில் இத்தலத்திலிருந்து மூன்றாம் பிறைச் சந்திர தரிசனத்தைப் பெறுதலால் தம்பதிகள் ஒற்றுமையாக வாழ்வர். சதாபிஷேக பாக்கியமும் கிடைக்கும்.

     

  • கண்ணொளி பெருகவும் கண்பிரை நோய்கள் தீர்வதற்கும் இங்கு சந்திர ஹோரை காலத்தில் அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபட வேண்டும்.

     

  • கண் சம்பந்தமான நோய்கள் நிவர்த்தியாக வலது கண்ணில் நோய் என்றால் ஞாயிறன்றும், இடது கண்ணில் நோய் என்றால் திங்களன்றும் மௌனவிரதமிருந்து இத்தலத்தில் சந்தனம் அரைத்து சுவாமிக்கு சந்தனக் காப்பாக இட்டு, அம்பாளுக்கு தாழம்பூக்களைக் கூந்தல் பட்டையாக அலங்கரித்துச் சார்த்தி வழிபட்டு வர கண் நோய்கள் குணமாகும் என்பது ஐதீகம்.

     

  • உயர் படிப்புகளில் சிறந்து விளங்க விரும்புவோர் இத்தலத்தில் வித்யாசக்தி நிறைந்த புதன்கிழமை தோறும் சந்தனம் அரைத்து புரசு இலையில் வைத்து சுவாமிக்கு காப்பிட்டு வழிபட்டு வரவேண்டும்.

     

  • திங்கள்கிழமை, சதயம், பௌர்ணமி, அமாவாசை நாட்களில் இவ்விறைவருக்குச் சந்தனக் காப்பு இட்டு வழிபட்டு வந்தால், முடி உதிர்வு, அழகின்மை, குள்ளமாயிருத்தல் போன்ற அங்க அம்சங்களாலும், வசதியின்மையாலும் திருமண வாய்ப்பு பாதிக்கப்பட்டு வேதனை அடைந்து இருப்போர் தக்க நிவர்த்திகளைப் பெறுவர்.

     

  • இச்சிவாலயம் 1300 ஆண்டு கால பழமையுடையதாகும்.

     

  • இஃது சப்த மங்கை தலங்களில் ஆறாவது தலமாகும்.

     

  • சுக்கிர கிரக தோஷம் உள்ளவர்கள் இவ்விறைவனை வழிபட்டால், தோஷம் நீங்கி வளமான வாழ்வு கிட்டும். மேலும் திருமணத்தடை, கண் பார்வை குறைபாடுகள் நீங்கும்.

     

  • இராஜராஜ சோழன் மாதந்தோறும் சதய நாளில் தன் குடும்பத்துடன் இத்தலத்திற்கு வந்து சந்தனம் அரைத்து சுவாமிக்கு சந்தன காப்புச் சார்த்தி பேரருள் பெற்றான் என்று கூறப்படுகின்றது.

     

  • இத்திருக்கோயிலில் மாதந்தோறும் பௌர்ணமி நாளில் வழிபடுவது சிறப்பாக போற்றப்படுகின்றது.

     

  • பல்லவப் பேரரசுகள் சோழநாட்டை ஆட்சி செய்த 7 - 9ஆம் நூற்றாண்டுகளில் கிழார் கூற்றத்து பவதாயமங்கலம் என வழங்கப்பெற்ற இவ்வூர், சோழப் பேரரசர்களின் 10 - 12ஆம் நூற்றாண்டுகளில் நித்த விநோத வளநாட்டு கிழார் கூற்றத்து பவதாயமங்களம் என வழங்கிவந்துள்ளது.

     

  • சுந்தர சோழர் காலத்தில் ஏற்பட்ட காவிரியின் பெருவெள்ளத்தால் கிழார் கூற்றத்தின் தலைமையிடமான கிழார் எனும் ஊரும், அக்கூற்றத்தில் திகழ்ந்த தாயமங்கலம் எனும் தாழமங்கையும் முற்றிலுமாக அழிந்து போயின. திருக்கோயில் மட்டும் அழிவின்றி அங்கேயே நிலைகொண்டுள்ளது.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு தஞ்சாவூர் - கும்பகோணம் நெடுஞ்சாலையில் இவ்வூர் (கோயில்) உள்ளது. அடிக்கடி பேருந்து வசதிகள் உள்ளது.

Related Content

அரியமங்கை - (ஹரிமங்கை)

நல்லிச்சேரி - (நந்திமங்கை)

பசுபதிகோயில் - (பசுமங்கை)