இறைவர் திருப்பெயர்: பசுபதீஸ்வரர்
இறைவியார் திருப்பெயர்: பால்வளநாயகி
தல மரம்:
தீர்த்தம் : காமதேனு தீர்த்தம்
வழிபட்டோர்:காமதேனு, சிலந்தி, யானை.
Sthala Puranam
காமதேனு பூஜித்தமையால் இத்தலம் பசுமங்கை என்று விளங்குகின்றது.
சப்த மாதர்களில் வாராகி வழிபட்டு ,ஈசனின் தமருகத்திலிருந்து (உடுக்கை) எழும் ஆதி நாதத்தைக் கேட்டு உய்ந்தாள். அதிலிருந்தே பிரபஞ்சங்கள் யாவும் உற்பத்தி ஆவதையும் அறிந்தாள். அதே தரிசனத்தை இங்கு வந்து வழிபட்ட அம்பிகையும் கண்டு,பேரானந்தப்பட்டாள்.
நாத சன்மா – அனவித்யா தம்பதிகள் இங்கு வந்து, பால்வள நாயகியையும் பசுபதி நாதரையும் வழிபட்டபோது, அம்பாள் அவர்களுக்கு அரிவை எனப்படும் பருவத்தில் காட்சி தந்து அருளினாள்.
அகத்தியரும் சுவாமியை வழிபட்டுப் பூஜித்துள்ளனர்.
Specialities
கோச்செங்கட்சோழ நாயனார் கட்டிய மாடக் கோயில்களுள் இதுவும் ஒன்றாகும்.
Contact Address