இறைவர் திருப்பெயர்: ஜம்புகேஸ்வரர்
இறைவியார் திருப்பெயர்: அகிலாண்டேஸ்வரி
தல மரம்:
தீர்த்தம் : தேவகாத தீர்த்தம்
வழிபட்டோர்:நந்தி, சூரியன், கௌதமர்.
Sthala Puranam
நந்திகேச்வார் பரமேச்வரனைப் பூஜை செய்து, பெருமானது பாத தரிசனம் பெற்ற தலமாதலால் நந்தி மங்கை எனப்படுகிறது.
சப்த கன்னிகைகளுள் வைஷ்ணவி தேவி இத்தலத்து ஈசனை வழிபட்டுப் பேறு பெற்றாள்.
அகிலாண்டேச்வரி என்ற பெயருடன் அம்பிகையும் இங்கு வந்து தவம் செய்து ஈச்வரனது பாத தரிசனம் பெற்றதாகத் தல புராணம் கூறுகிறது.
காசியிலிருந்து வந்த தம்பதிகளுக்கு அம்பிகை கன்னிகை வடிவில் காட்சி கொடுத்தாள்.
காசியைப்போலவே அருகில் மயானமும் அதன் எதிரில் ஒரு சிவ சன்னதியும் உள்ளன.
Specialities
மேற்கு நோக்கிய சன்னதி
இறக்க முக்தி தரும் தலம். காசியைப்போல் சன்னதி மயானத்தை நோக்கி அமைந்துள்ளது.
பங்குனி மாத சங்கடஹர சதுர்த்தியன்று இவ்விறைவனை சூரியன் வழிபடும் அற்புத காட்சி இன்றளவும் சிறப்பாக காணக்கூடியதாக உள்ளது.
Contact Address