இறைவர் திருப்பெயர்: அரிமுத்தீஸ்வரர்
இறைவியார் திருப்பெயர்: ஞானாம்பிகை
தல மரம்:
தீர்த்தம் : ஹரிதீர்த்தம்
வழிபட்டோர்:மகாவிஷ்ணு, அரிமங்கை.
Sthala Puranam
ஹரி (மகாவிஷ்ணு) வழிபட்டு முத்தி பெற்றமையால் இவ்விறைவர் அரிமுத்தீஸ்வரர் என்ற விளங்குகின்றார்.
இத்தலம் ஒரு காலத்தில் நெல்லி வனமாக இருந்தது. அங்கிருந்த அரிநெல்லி மரக் கனியை மட்டும் உண்டு, இங்குள்ள சத்திய கங்கை தீர்த்தத்தில் நீராடி, திருமாலை ஒருகாலத்திலும் பிரியாதிருக்கும் வரம் வேண்டி சிவபிரானைப் பூஜித்து வந்தாள் மகாலக்ஷ்மி.
சப்த மங்கையரில் ஒருவளான மாகேச்வரி வழிபட்ட இத்தலத்தை பார்வதி தேவி வழிபட்டவுடன், அம்பிகைக்குத் தனது சிரத்தின் உச்சியில் கங்கை பொங்க அற்புத தரிசனம் காட்டினார் பெருமான். அதுவே தற்போது சத்திய கங்கை தீர்த்தமாகத் திகழ்கிறது.
காசி தம்பதியர்க்கு ஞானாம்பிகை, பெதும்பை(பள்ளி)ப் பருவத்தவளாகக் காட்சி அளித்தாள்.
Specialities
Contact Address