Home >
hindu-hub >
temples
செம்பியன்மாதேவி ஸ்ரீகைலாசநாதர் திருக்கோவில்
இறைவர் திருப்பெயர்: கயிலாசநாத சுவாமி
இறைவியார் திருப்பெயர்: பெரியநாயகி (பிருகந்நாயகி).
தல மரம்:
தீர்த்தம் : நான்மறை தடம்
வழிபட்டோர்:செம்பியன்மாதேவி, (இவருக்குப்பின் வந்த சோழ வம்சத்தினர்)
Sthala Puranam
- சோழர் மரபில் தோன்றி தி.பி. 985 முதல் 989 வரையில் ஆட்சி செய்த கண்டராதித்த சோழனின் பட்டத்தரசியரான செம்பியன்மாதேவியாரால் இவ்வூர் அமைக்கப்பட்டதினால் "செம்பியன்மாதேவி" என்ற பெயருடன் விளங்குகிறது.
- இக்கோயில் 'ஸ்ரீ கயிலாயம்' என்ற பெயருடையது; இக்காலத்தில் கயிலாச நாதர் திருக்கோயில் என்று வழங்குகிறது.
Specialities
- இக்கோயில் 1 - 82 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
- கிழக்கு மேற்காக 310 அடியும், வட தெற்காக 275 அடி நீளம், அகலம் கொண்டு இரண்டு பிரகாரங்களுடன் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.
- இக்கோயில் சிற்ப ஆகம விதிப்படி சிவன் கோயில்களுக்குரிய அங்கங்களுடன் சிறப்பாகவும் கற்றளியாகவும் அமைக்கப்பட்டுள்ளது.
- ஸ்ரீ கயிலாயம் என்ற இத்திருக்கோயிலை புதிய கற்றளியாக கட்டியவர் செம்பியன்மாதேவியாரே.
- இதுகாறும் கல்வெட்டுச் சான்றுகள் ஆராய்ந்து கண்ட அளவில் செம்பியன்மாதேவியார் தமிழகத்தில் செங்கற்கோயிலாகவும் பாடல் பெற்ற தலமாகவும் இருந்த பழங்கோயில்களுள் பத்துச் சிவன் கோயில்களைக் கருங்கல் திருப்பணியாகக் (கற்றளி) கட்டியுள்ளார். (அவை : திருநல்லம், திருமுதுகுன்றம் [விருத்தாச்சலம்], திருவாரூர் அரநெறி, திருமணஞ்சேரி, தென்குரங்காடுதுறை, திருக்கோடிகா, ஆனாங்கூர், திருத்துருத்தி [குத்தாலம்], திருவக்கரை, திருச்சேலூர் என்ற ஊர்களிலுள்ள சிவாலயங்களேயாகும்.)
- இக்கோயிலிலுள்ள மண்டபமொன்று, செம்பியன்மாதேவி பெருமண்டபம் என்று பெயர் பெற்றது.
- கருவறை விமானம் உயரமானது.
- செம்பியன்மாதேவி உருவச்சிலை வழிபாட்டிலுள்ளது.
- ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் இக்கோயிலில் பத்து நாட்கள் திருவிழா நடைபெறும். இதில் செம்பியன்மாதேவியாரின் சித்திரைக் கேட்டைப் பெருவிழாவும் சிறப்புடன் நிகழும்.
- இக்கோயிலில் 23 கல்வெட்டுக்கள் உள்ளன.
- கல்வெட்டுக்களை 80 வருட முன்பு கல்வெட்டுத் துறையினர் படியெடுத்து ஆண்டறிக்கை வழியே கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
- கல்வெட்டுச் செய்திகளால் செம்பியன்மாதேவியார் வரலாற்றுடன் அக்காலச் சோழ மன்னர்களின் அறச்செயல்கள், உத்தம சோழனின் மனைவியர், செம்பியன்மாதேவிச் சதுர்வேதி மங்கலத்துச் சபையாரின் நிகழ்ச்சிகள் ஆகிய வரலாற்றுச் செய்திகள் புலனாகின்றன.
- கல்வெட்டுக்களுள் உத்தம சோழன் காலத்து கல்வெட்டுக்கள் 8, முதல் இராசராசன் காலத்து கல்வெட்டுக்கள் 4, முதல் இராசேந்திரன் காலத்துக் கல்வெட்டுக்கள் 4, முதல் இராசாதிராசன் காலத்து கல்வெட்டு 1, மூன்றாம் இராசராசன் காலத்து கல்வெட்டு 1, சடையவர்மன் வீரபாண்டியன் காலத்து கல்வெட்டுக்கள் 2, சிதைவுடன் உள்ள கல்வெட்டுக்கள் 3 ஆக 23 கல்வெட்டுக்கள்.
- இக்கோயிலுக்கு நன்சென் 279 ஏக்கர், 81 செண்டும், புன்சென் 115 ஏக்கர் 10 செண்டும் உள்ளன.
- செம்பியன்மாதேவியாரின் கணவரான கண்டராதித்தர் தில்லைப்பெருமான் மீது திருவிசைப்பா பதிகம் பாடியவர்
Contact Address
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
திருவாரூர் - நாகப்பட்டினம் இருப்புப் பாதையில், கீழ்வேளூர் புகைவண்டி நிலையத்திலிருந்து தெற்கே தேவூர் என்ற பாடல் பெற்ற தலத்தையடைந்து, அவ்வூரிலிருந்து தென்கிழக்கே போகும் சாலையில் 7-கி. மீ. சென்றால் இத்தலத்தை அடையலாம்.
Related Content