இறைவர் திருப்பெயர்: வன்மீகநாதர், பழம்புற்றுநாதர்.
இறைவியார் திருப்பெயர்: பாகம்பிரியாள்.
தல மரம்:
தீர்த்தம் : வாசுகி
வழிபட்டோர்: மகாவிஷ்ணு, வாசுகி.
Sthala Puranam
'கல்லல்' என்ற ஊருக்குப் பக்கத்தில் 'வெற்றியூர்' என்றொரு ஊர் இருப்பதால், இத்தலத்தை "திருவெற்றியூர்" என்றே அழைக்கின்றனர்.
வைப்புத்தலப் பாடல்கள் : சம்பந்தர் - மனவஞ்சர் மற்றோட (2-39-6) சுந்தரர் - மூல னூர்முத லாயமுக் (7-12-3).
மகாவிஷ்ணு தனக்கு ஏற்பட்ட புற்று நோயைத் இத்தல இறைவனை வழிபட்டு, சிவபுஷ்கரணியான வாசுகி தீர்த்தத்தில் நீராடி நீங்கப் பெற்ற தலம்.
Specialities
தட்சிணாமூர்த்தியிடத்தில் உபதேசம் பெறும் நான்கு முனிவர்களின் திருவுருவங்களும் தனித்தனி மூர்த்தங்களாகப் பக்கத்தில் வைக்கப்பட்டுள்ளன.
மாவிளக்கு பிரார்த்தனை செய்பவர்கள் கோயிலிலேயே மாவை இடித்துக்கொள்ளும் பொருட்டு, பிராகாரத்திலேயே நிறைய கல் உரல்கள் ஆங்காங்கே உள்ளன.
இக்கோயிலில் யாரேனும் திருடினால், கட்டாயம் இறைவனால் உடனேயே ஏதேனும் தண்டனை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை மக்களிடையே நிலவுகிறது.
Contact Address