logo

|

Home >

hindu-hub >

temples

விளத்தொட்டி(Vilathotti)  

இறைவர் திருப்பெயர்: பிரமபுரீசுவரர்.

இறைவியார் திருப்பெயர்: இக்ஷுரசநாயகி.

தல மரம்:

தீர்த்தம் :

வழிபட்டோர்: இந்திரன், பிரமன், திசைப்பாலகர்கள்.

Sthala Puranam

  • முருகன் தொட்டிலில் வளர்ந்த தலம்; 'வளர்தொட்டில்' என்பது மாறி, வழக்கில் 'விளத்தொட்டி' என்று வழங்குகிறது.

     

  • இந்திரன், பிரமன், திசைப்பாலகர்கள் முதலியோர் வழிபட்ட தலம்.
  • வைப்புத்தலப் பாடல்கள்		: அப்பர் - மண்ணிப் படிக்கரை (6-70-6). 

Specialities

  • இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.

     

  • முன் மண்டபத்தில் இடதுபுறம் - பிரம்மன் சிவலிங்கத்தை வழிபடும் ஐதீகச் சிற்பம் உள்ளது.

     

  • மகா வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் இவ்வூர்த்தல புராணம் - விளத்தொட்டி புராணம் பாடியுள்ளார்.

     

  • தலபுராண வரலாற்றையொட்டி, இன்னும் இவ்வூரில் வாழ்வோர், குழந்தை பிறந்து பத்து நாள்கள் வரை தொட்டிலில் போடாமல் 'தூளி'யில் குழந்தையை இட்டு கண்வளரச் செய்து வருகின்றனர்.

     

  • பைத்தியம் முதலியனவும், கொடிய நோய்களும் கோய்களும் நிவிர்த்தியாகும் மேன்மையுடைய தலம்.

     

  • வைகாசி விசாகத்தில் பிரமோற்சவம் நடைபெறுகிறது.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு வைத்தீசுவரன் கோயில் - திருப்பனந்தாள் சாலையில் 'மணல்மேடு' வந்து, 'பந்தநல்லூர்' சாலையில் சென்று - 'திருச்சிற்றம்பலம்' அடைந்து அங்கங்கே விசாரித்து சென்று 'விளத்தொட்டி'யை அடையலாம்.

Related Content