logo

|

Home >

hindu-hub >

temples

வளைக்குளம் (வளைகுளம், வளர்புரம்) Valaikkulam (Valaikulam, Valarpuram)

இறைவர் திருப்பெயர்: நாகேஸ்வரர்

இறைவியார் திருப்பெயர்: சொர்ணவல்லி.

தல மரம்:

தீர்த்தம் : சங்கு தீர்த்தம்.

வழிபட்டோர்:ஆதிசேஷன்

Sthala Puranam

  • இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.
வைப்புத்தலப் பாடல்கள்		: அப்பர் - 1. வானவர்கோன் தோளிறுத்த (6-50-8), 
					   2. நெருப்பனைய மேனிமேல் (6-59-2),  
					   3. நள்ளாறும் பழையாறுங் (6-71-10). 

 

Specialities

  • 'குளம்' என்ற முடிபு கொண்டுள்ள தலங்களுள் இவ்'வளைக் குளமும்' ஒன்று. ஏனையவை 1. கடிக்குளம், 2. தளிக்குளம், 3. இடைக்குளம், 4. திருக்குளம், 5. பாற்குளம் என்பன.

     

  • 800 ஆண்டுப் பழைமையுடைய கற்கோயில்.

     

  • கோயிலின் எதிரில் "சங்கு தீர்த்தம்" வளை குளம் உள்ளது; தூய நன்னீர். குளத்தில் நத்தைகள் அதிகமுள்ளன.

     

  • சங்கு தீர்த்தம் (வளைகுளம்) - (பண்டை நாளில் இக்குளம் சங்கு வடிவிலேயே அமைந்திருந்தது என்றும், பிற்காலத்தில் படிகள் அமைத்துப் பணி செய்தபோது அந்த அமைப்பு மாறிவிட்டது என்றும் சொல்லப்படுகிறது.)

     

  • பங்குனி உத்திரம் முதலான உற்சவங்களும், விசேஷ வழிபாடுகளும், சிறப்பாக நடைபெறுகின்றன.

     

  • சுந்தர பாண்டியன் மன்னன் இக்கோயிலுக்கு நிவந்தங்கள் அளித்துள்ளதைக் கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. இவ்வூர்ச் சிவாலயக் கல்வெட்டில் "வளைகுளத்து நாகேஸ்வரமுடையார்" என்று வரும் தொடரில் தலப்பெயர் குறிக்கப்பட்டுள்ளது.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு அரக்கோணத்திலிருந்து பேருந்துகள் செல்கின்றன; பேருந்து வசதி அடிக்கடி இல்லை.

Related Content