logo

|

Home >

hindu-hub >

temples

வழுவூர் (Vazhuvoor)

இறைவர் திருப்பெயர்: வீரட்டேஸ்வரர், கஜசம்ஹாரர், கஜாரி, ஞானசபேசன்.

இறைவியார் திருப்பெயர்: பால குஜாம்பிகை, இளங்கிளை நாயகி.

தல மரம்:

தீர்த்தம் : பஞ்சமுக தீர்த்தம்.

வழிபட்டோர்:ஜேஷ்டா தேவி, நாகர்கள், பிடாரி, சப்தமாதர்கள்.

Sthala Puranam

  • பிரளய காலத்தில் உலகெல்லாம் அழிந்தும் இவ்வூர் அழியாது பிரளயத்தினின்றும் வழுவின காரணத்தால் வழுவூர் என்று பெயர் பெற்றது.

     

  • தாருகாவனத்து முனிவர்கள் இறைவனுக்கு எதிராகச் செய்த ஆபிசார வேள்வியில் தோன்றிய யானையை, இறைவன்பால் ஏவிவிட, பெருமான் அந்த யானையை அழித்துத் தோலைப் போர்த்திக் கொண்டருளிய வீரச் செயல் நிகழ்ந்த தலம்.

     

  • ஆபிசார வேள்வியில் எழுந்த யானை இறைவனை நோக்கிச் சினந்து ஓடிவர, அதையழிப்பதற்காக இறைவன் அதன் உடலுள் புகுந்தார். உலகங்கள் இருண்டன - அம்பிகை செய்வதறியாது திகைத்தார். இறைவன் தன்னுள் புகுந்ததைத் தாளாத யானை, பஞ்ச முக தீர்த்தத்தில் போய் வடமேற்கு மூலையில் விழுந்தது. இறைவன் அதையழித்துத் தீர்த்தத்தின் தென் மேற்கு மூலையில் எழுந்து வந்தார். கணவனைக் காணாது அம்பிகை வருத்த முற்றுச் செல்ல முற்பட; இறைவன் எழுந்து வெளிப்படவே, முருகப் பெருமான் தன் தாய்க்கு "இதோ தந்தையார்" என்று சுட்டிக் காட்டினாராம். இவ்வரலாறு பற்றிய காட்சி கோயிலுள் சிற்பங்களாக உள்ளன.

  • vazhuvur temple

  • வைப்புத்தலப் பாடல்கள்		: அப்பர் - 1. உஞ்சேனை மாகாளம் (6-70-8), 
    					   2. காவிரியின் கரைக்கண்டி (6-71-2). 
    

Specialities

  • இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.

     

  • அட்ட வீரட்டத்தலம்; எனினும் பாடல் பெற்ற தலத்தில் இஃது இடம் பெற வில்லை.vazhuvur temple

     

  • இத்தலத்துக்குரிய கஜசம்ஹார மூர்த்தியும், அவர் எழுந்தருளியுள்ள ஞான சபையும் சிறப்பானவை.

     

  • இது பிப்பிலவனம், சமீவனம், தாருகாவனம், பதரிகாவனம் ஆகிய நான்கு வனங்களால் சூழப்பட்ட வீரட்டானம் என்று சொல்லப்படுகிறது.

     

  • ஜேஷ்டா தேவி, நாகர்கள், பிடாரி, சப்த மாதாக்கள் வழிபட்ட லிங்கங்கள் பைரவர் சந்நிதிகள் உள்ளன.

     

  • கஜசம்ஹார மூர்த்தி அழகான மூர்த்தம்; அழகிய வேலைபாடமைந்தது.

     

  • அம்பாள் திருமேனி - இடுப்பில் முருகனுடன் காட்சி. முருகன் ஒருவிரலை பக்கத்திலுள்ள மூர்த்தியைச் சுட்டும் நிலையில் இருப்பதும், அம்பிகை ஒரு பாதத்தைத் திருப்பி நடந்து செல்ல முயலும் அமைப்பில் இருப்பதும் கண்டு மகிழத்தக்கது. இவ்வமைப்பு தலபுராணம் தொடர்புடையது.

     

  • மூலவர் - சுயம்பு மூர்த்தி; நாகாபரண அலங்காரத்தில் அழகு மிளிர காட்சித் தருகிறார்.

     

  • சுவாமி மண்டபத்தில் அட்ட வீரட்டச் செயல்கள் ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன.

     

  • மாசி மகத்தில் பெருவிழாவும், கஜசம்கார ஐதீக நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

     

  • இக்கோயிலில் 10 க்கும் மேற்பட்ட கல்வெட்டுக்கள் உள்ளன.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு மயிலாடுதுறை - திருவாரூர் பேருந்துச் சாலையில் வழுவூர் என்று கைகாட்டி உள்ள இடத்தில் இறங்கி, 2 கி.மீ. சென்றால் ஊரையடையலாம். கோயில் வரை வாகனங்கள் செல்லும்.

Related Content