logo

|

Home >

hindu-hub >

temples

மூவலூர் (Moovalur)

இறைவர் திருப்பெயர்: மார்க்கசகாயேஸ்வரர்.

இறைவியார் திருப்பெயர்: மங்களாம்பிகை, சௌந்தரநாயகி.

தல மரம்:

தீர்த்தம் : காவிரி, சந்திர புஷ்கரணி, துர்க்கை ,புஷ்கரணி, உபமன்யு கூபம் முதலியன.

வழிபட்டோர்:சப்த மாதர்கள், பிரமன், திருமால், துர்க்கை.

Sthala Puranam

  • அரி, அயன், அரன் மூவரும் வழிபட்ட தலமாதலின்; மூவர் ஊர் - என்பது மருவி மூவலூர் என்றாயிற்று.

     

  • இத்தலத்திற்குப் புன்னாகவனம் என்றொரு பெயருமுண்டு.
  • வைப்புத்தலப் பாடல்கள்	: அப்பர் - 1. பூவ னூர்தண் புறம்பயம் (5-65-8), 
    					   2. தந்தைதா யில்லாதாய் (6-41-9). 

Specialities

  • இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.

     

  • திருவாவடுதுறை ஆதீன முதற்குரவர் ஸ்ரீ நமசிவாய மூர்த்திகளின் அவதாரத் தலம்.

     

  • திருஞானசம்பந்தர் இப்பதியை வணங்கியதாகப் பெரிய புராணத்துள் காணப்படினும் பாடிய அவருடைய பாடல் கிடைக்கவில்லை.

     

  • பலிபீடம் நடுவிருக்க நாற்புறமும் நான்கு சிறிய நந்திகளும், அதன் முன்னால் ஒரு பெரிய நந்தியும் சிறப்பான அமைப்பில் காட்சியளிக்கின்றன.

     

  • உள்ளே வாயிலின் இருபுறமும் ஆட்கொண்டார், உய்யக் கொண்டார் திருமேனிகள் உள்ளன.

     

  • வெளிச்சுற்றில் விநாயகர் மூன்று திருமேனிகளில் ஒரே சந்நிதியில் உள்ளார்.

     

  • தலமரமான புன்னையுடன், புராதனமான பலாமரமொன்றும் உள்ளது.

     

  • தட்சிணாமூர்த்தியின் திருவடிக்கீழ் யானை முகம், மான், சிம்மம், ரிஷபம் முதலியவையும் முயலகன், சனகாதியர் நால்வர் ஆகியோருடன் சேர்ந்திருப்பது புதுமையாகவுள்ளது.

     

  • சௌந்தர நாயகி சந்நிதி தனியே உள்ளது. இச்சந்நிதியின் கருவறைச் சுவரில் வெளிப்புறத்தில் மேற்புறமாக பல அரிய சிற்பங்கள் உள்ளன.

     

  • இக்கோயில் 10ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது.

     

  • சோழ, பாண்டிய, விஜயநகர மன்னர்கள் காலத்திய கல்வெட்டுக்கள் பல உள்ளன.

     

  • இவ்வூரை ஜெயங்கொண்ட சோழ வளநாட்டு திருவழுந்தூர் நாட்டு திருமூவலூர் என்று கல்வெட்டுக் குறிக்கின்றது.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு மயிலாடுதுறை - கும்பகோணம் சாலையில் 2 கி. மீ. தொலைவில் பிரதான சாலையில் கோயில் உள்ளது. மயிலாடுதுறையிலிருந்து அடிக்கடி பேருந்து உள்ளன.

Related Content