இறைவர் திருப்பெயர்: தாகம்தீர்த்தபுரீசுவரர்.
இறைவியார் திருப்பெயர்: அன்னபூரணி.
தல மரம்:
தீர்த்தம் :
வழிபட்டோர்:
Sthala Puranam
திருமுதுகுன்றம், பெண்ணாகடம் தொழுத திருஞானசம்பந்தர் நெல்வாயில் அரத்துறையைத் தரிசிக்கச் செல்லும் வழியில், மாலை பொழுது ஆனமையின் மாறன்பாடியை அடைந்து அவ்விரவு தங்கினார். அவருடைய நடைக்களைப்பையுணர்ந்த இறைவன் அன்றிரவு அவ்வூரில் உள்ளவர்களின் கனவில் தோன்றி, "நம்மைத் தொழ வருகின்ற ஞானசம்பந்தனுக்குத் தருவதற்காக முத்துச்சிவிகை, குடை, சின்னம் முதலியவற்றை அளித்துள்ளோம். அவற்றை எடுத்துச் சென்று அவரை எம்மிடம் அழைத்து வருக" என்றருளினார். விழித்த அவர்கள் காலையில் சென்று, கோயிலில் அவைகள் இருக்கக் கண்டு அதிசயித்து, அவ்வாறே அவற்றை எடுத்துச் சென்று ஞானசம்பந்தரை வரவேற்றனர். திருவருட் கருணையை வியந்த திருஞானசம்பந்தர், ஐந்தெழுத்து ஓதி அச்சிவிகையில் ஏறி அரத்துறை சென்றார் என்பது வரலாறு.
Specialities
Contact Address