இறைவர் திருப்பெயர்: | மகா காளேஸ்வரர். |
---|---|
இறைவியார் திருப்பெயர்: | |
தல மரம்: | |
தீர்த்தம் : | |
வழிபட்டோர்: |
மத்தியப் பிரதேசம் - உஜ்ஜயினி நகரத்தில் உள்ள தலம். ஊர் - உஜ்ஜயினி; கோயில் - மாகாளம்.
'சுதன்வா' என்னும் ஜைன மன்னன் இட்ட பெயரான "உஜ்ஜைனவனம்" என்பது பிற்காலத்தில் மருவி 'உஜ்ஜயினி' என்றாயிற்று.
இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.
மாகாளர் பாதாளத்தில் கம்பீரமாக, கவசத்தில் காட்சித் தருகிறார். பூமிக்குள் பல படிகள் இறங்கிப் பாதாளத்தில் தான் மாகாளேசுவரரைத் தரிசிக்க வேண்டும்.
இத்தலம் பன்னிரண்டு ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்று.
முத்தி தரும் தலங்கள் ஏழனுள் இதுவும் ஒன்று - அவந்தி என்று போற்றப்படுவது. (1. அயோத்தி, 2. மதுரா, 3. மாயா (ஹரித்வார்), 4. துவாரகை, 5. காசி, 6. அவந்தி (உஜ்ஜயினி), 7. காஞ்சி என்பவை முத்தி தரும் ஏழு தலங்கள்.)
அமைவிடம் மாநிலம் : மத்தியப் பிரதேசம் சென்னை - புதுடில்லி பாதையில் இந்தூர் அல்லது போபால் ரயில் நிலையத்தை அடைந்து, அங்கிருந்து பேருந்தில் செல்லலாம்.