logo

|

Home >

hindu-hub >

temples

மணிக்கிராமம் (Manikkiramam)

இறைவர் திருப்பெயர்: திருமேனியழகர்.

இறைவியார் திருப்பெயர்: சௌந்தரநாயகி.

தல மரம்:

தீர்த்தம் :

வழிபட்டோர்:

Sthala Puranam

  • கோயில் கல்வெட்டில் தலபுராணமாக பதிக்கப்பட்டுள்ள செய்தி - "வல்லபன் என்னும் கர்நாடக தேசத்து மன்னனுக்கு, ஒரு மகன் இருந்தான், அவன் குட்டநோய் உடையவனாயும், குருடாகவும், முடமாகவும், ஊமையாகவும் இருந்தான். வருந்திய மன்னன், காவலர்களிடம், தன் மகனை எங்கேனும் தனித்து விட்டு விட்டு வரும்படி பணித்தான். அவர்களும் அழைத்து வந்து இங்கு (இத்தலத்தில்) விட்டுச் சென்றனர். பூசை செய்ய வந்த அர்ச்சகர் அம்மகனைக் கண்டு மனமிறங்கி, சுவாமிக்கு அபிஷேகம் செய்த தீர்த்தத்தை அவன் வாயில் ஊற்றிப் பருகச் செய்தும், அவன் உடலில் தெளித்தும் வந்தார். இறைவன் அருளால் அவனுடைய உடற்பிணிகள் அனைத்தும் நீங்கி, பேசும் வல்லமையும் பெற்று விளங்கினான். இறைவனாகிய திருமேனியழகர், அவனுக்கு காட்சி தந்து, அவனுடைய வரலாற்றினை சொல்லி, அவனுக்கு தேர், வில் முதலிய படைக்கலங்களயும் பலத்தையும் அருளி, அவனுடைய நாட்டுக்கு அனுப்பி வைத்தார். அவனும் தன் நாடு திரும்பி, நல்லாட்சி புரிந்து, மறவாமல் இறைவனை வழிபட்டு வாழ்ந்தான்." - பராசர புராணம்.

     

  • மணிக்கிராமத்தார் என்னும் மணி வணிகர் வளமுடன் வாழ்ந்த பகுதி இன்று மணிக்கிராமம் என்ற பெயரில் ஊராக உள்ளது. மணிக்கிராமத்தார் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே கடல் வழிச் சென்று பிற நாடுகளுடன் வாணிகம் செய்து வந்துள்ளனர். சயாம் நாட்டில் 'தகோபா' என்னுமிடத்தில் மணிக்கிராமத்தார் வெட்டிய 'அவணி நாரணம்' என்னும் ஏரி பற்றிய கல்வெட்டு ஒன்று உள்ளது என்று சொல்லப்படுகிறது.

     

  • மணிக்கிராமத்திற்கும் திருவெண்காட்டிற்கும் இடையிலுள்ள சாலைக்கு "அக்க சாலை" - (நாணயச்சாலை) என்று பெயர்.

  • வைப்புத்தலப் பாடல்கள்		: அப்பர் - பெருக்காறு சடைக்கணிந்த (6-71-5).

Specialities

  • இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.

     

  • இத்தலத்திற்கு 'மதங்காசிரமம்' என்ற பெயருமுண்டு.

     

  • பிரகார வலப்பால் நடராச சபை உள்ளது.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு சீகாழி - பூம்புகார்ச் சாலையில், திருவெண்காடு அடுத்து மணிக்கிராமம் உள்ளது.

Related Content