logo

|

Home >

hindu-hub >

temples

திருபுவனம் (Thirubuvanam)

இறைவர் திருப்பெயர்: கம்பஹரேஸ்வரர்.

இறைவியார் திருப்பெயர்: தர்மசம்வர்த்தினி.

தல மரம்:

தீர்த்தம் :

வழிபட்டோர்:வாணாசுரன், வரகுண பாண்டியன்.

Sthala Puranam

  • இரணியனை அழித்த நரசிம்மத்தினை இறைவன் சரபமூர்த்தியாக வந்து அடக்கிய தலம்.

     

  • வரகுண பாண்டியன் தனக்கு நேர்ந்த பிரமகத்தி பழி நீங்கிச் செல்லுங்கால், அப்பழி பின்னும் தொடருமோ என, அவனுக்கு உண்டாகிய நடுக்கத்தைத் தீர்த்து வைத்தமையால் சுவாமிக்கு கம்ப ஹரேஸ்வரர் என்று பெயர். (கம்பம் - நடுக்கம்)

  • வைப்புத்தலப் பாடல்கள்		: அப்பர் - புன்கூரார் புறம்பயத்தார் (6-51-11). 

Specialities

  • இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.

     

  • வாணாசுரன் பூசித்தது.

     

  • பெரிய கோயில்; கற்றளி.

     

  • பிராகாரத்தில் சரபமூர்த்தி உட்பட சிற்ப வேலைப்பாடுடைய கற்கட்டிடம் உள்ளது.

     

  • இத்தலத்தில் சரபேஸ்வர் சிறப்பு மூர்த்தியாக இருந்து அருள்பாலிக்கின்றார்.

     

  • சண்டேசுவரர் சந்நிதியின்மேல் முகப்பில் உமை அருகிலிருக்க, சிவபெருமான் சண்டேசுவரருக்குக் கொன்றை மாலையைத் தலையிற் சூட்டிச் "சண்டீசப்பதம்" நல்கும் காட்சி சுதையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

     

  • பங்குனியில் பெருவிழா மற்றும் பிற வழிபாடுகளும் நடைபெறுகிறது.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு கும்பகோணம் - மயிலாடுதுறை பாதையில், (கும்பகோணத்திலிருந்து 8 கி.மீ.ல்) சாலையோரத்தில் உள்ள தலம்.

Related Content

திருப்பூவணம்