logo

|

Home >

hindu-hub >

temples

புரிசை நாட்டுப் புரிசை (புரிசை) Purisai Nattu Purisai (Purisai)

இறைவர் திருப்பெயர்: அகத்தீசுவரர்.

இறைவியார் திருப்பெயர்: அகிலாண்டேஸ்வரி.

தல மரம்:

தீர்த்தம் :

வழிபட்டோர்:அகத்தியர்.

Sthala Puranam

  • 'புரிசை' என்னும் பெயரில் இரண்டு ஊர்கள் உள்ளன. 1. வந்தவாசிக்கும் செய்யாற்றுக்கும் இடையில் உளளது. 2. தக்கோலம் அருகில் உள்ளது.

     

  • சுந்தரர், தம் தேவாரத்துள் கூறும் பொன்னூர் நாட்டுப் பொன்னூர், இவ்வூருக்கு அருகில் இருப்பதாலும், புரிசை நாட்டுப் புரிசை என்று, பொன்னூரை அடுத்துப் புரிசையைச் சுந்தரர் குறிப்பிடுவதாலும், முதலாவதாகக் குறிப்பிடப்பட்டுள்ள வந்தவாசியை அடுத்துள்ள புரிசையே வைப்புத் தலமாகும்.

  • வைப்புத்தலப் பாடல்கள்		: சுந்தரர் - தென்னூர் கைம்மைத் (7-12-6). 

Specialities

  • இத்தலம் சுந்தரர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.

     

  • சுவாமியை தரிசிக்க உள்ள சாளரத்தின் உட்புறத்தில் அகத்தியர் வழிபடும் சிற்பம் உள்ளது.

     

  • கருவறையின் வெளிப்புறத்தில் - மகாமண்டபச் சுவரில் நாயன்மார்களின் வரலாற்றுச் சிற்பங்கள் - புடைப்புச் சிற்பங்களாக அமைந்துள்ளன. மேலும் காமதகனம், இராவணன் கயிலையை எடுப்பது போன்ற புராணச் சிற்பங்களும், சிவமூர்த்தங்களும் உள்ளன.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு வந்தவாசிக்கும் செய்யாற்றுக்கும் மத்தியில் உள்ளது. சாலையில் 'புரிசை' என்ற பெயர்ப் பலகையுள்ள இடத்தில் திரும்பி ஊருள் விசாரித்து செல்ல வேண்டும்.

Related Content