logo

|

Home >

hindu-hub >

temples

நாங்கூர் (Naangoor)

இறைவர் திருப்பெயர்: மதங்கீஸ்வரர்.

இறைவியார் திருப்பெயர்: மதங்கீஸ்வரி

தல மரம்:

தீர்த்தம் :

வழிபட்டோர்:திருமால்.

Sthala Puranam

  • இத்தலம் பராசரவனம் எனப்படுகிறது.

     

  • தலபுராணம் - மதங்க முனிவரின் வேண்டுகோளின்படி திருமால், பன்னிரண்டு மூர்த்தங்களாக வடிவங்கொண்டு இப்பராசரவனத்தில் வெவ்வேறிடங்களில் எழுந்தருளிச் சிவபெருமானை வழிபட்டதாகக் கூறுகிறது.

  • வைப்புத்தலப் பாடல்கள்	: சுந்தரர் - 1. தேங்கூ ருந்திருச் சிற்றம் (7-12-4), 
    					   2. தாங்கூர் பிணிநின் னடியார் (7-47-6). 

Specialities

  • இத்தலம் சுந்தரர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.

     

  • கரிகாற் சோழனின் தாய் மாமனாகிய இரும்பிடர்த்தலையார், திருவிசைப்பா திருப்பல்லாண்டு பாடிய சேந்தனார் ஆகியோர் இத்தலத்தையுடையவராவர்.

     

  • இரட்டைப் புலவர்கள் இவ்வூர்ச் சிவனைப் பாடியுள்ளனர்.

     

  • இங்குள்ள சிவாலயங்களுள் அருள்மிகு மதங்கீஸ்வரர் வீற்றிருந்தருளும் ஆலயமே வைப்புத் தலமாகும்.

     

  • வெளியே இரண்டு நந்திகள் - ஒன்று சுவாமியை நோக்கியும் மற்றொன்று எதிர்த் திசை நோக்கியும் உள்ளன.

     

  • நேரே மூலவர் தரிசனம் - உயர்ந்த பீடம் - ஆவிடையார். பிரம்மாண்டமான மூலவர் - சிவலிங்க மூர்த்தம் - மிகப் பருத்த பாணம். மனத்தை வியப்புறச் செய்யும் அற்புதமான தரிசனம் - மெய்சிலிர்க்கிறது.

     

  • இங்குள்ள விநாயகர் கோயில் "நாலாயிரத்தொருவர் கோயில்" என்று வழங்குகிறது.

     

  • இது நாங்கூர் நாட்டின் தலைநகரமாதலின், 'நாங்கூர் நாட்டு நாங்கூர்' என்று குறிக்கப்படுகிறது.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு சீர்காழி - நாகப்பட்டினம் (வழி) பொறையாறு சாலையில் "அண்ணன் பெருமாள் கோயில்" என்னும் ஊரையடைந்து, அங்குச் சாலையில் கட்டப்பட்டுள்ள வளைவு வழியே சென்று, நாங்கூருக்குச் செல்லும் சாலையில் 2 கி.மீ. சென்றால் நாங்கூரை அடையலாம். சீர்காழியிலிருந்தும் மயிலாடுதுறையிலிருந்தும் பேருந்து வசதியுள்ளது.

Related Content