logo

|

Home >

hindu-hub >

temples

தேவீச்சுரம் - நாகர்கோவில் வடிவீஸ்வரம்சுந்தரேஸ்வரர் அழகம்மன் திருக்கோயில் Deveechuram - (Vadiveeswaram)

இறைவர் திருப்பெயர்: சுந்தரேஸ்வரர், தேவீஸ்வரர்.

இறைவியார் திருப்பெயர்: அழகம்மன், வடிவழகி நாயகி, அழகேஸ்வரி.

தல மரம்:

தீர்த்தம் : பெரிய குளம்

வழிபட்டோர்:அம்பிகை (தேவி), இந்திரன்.

Sthala Puranam

  • இன்று "வடிவீஸ்வரம்" என்று வழங்குகிறது.

     

  • அம்பிகை (தேவி) வழிபட்ட தலமாதலின் இத்தலம் 'தேவீச்சுரம்' என்று பெயர் பெற்றது.
  • வைப்புத்தலப் பாடல்கள்		: அப்பர் - செழுநீர்ப் புனற்கெடில (6-7-5). 
  • இந்திரன் மாலை வேளையில் சுவாமியைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக வரலாறாதலின், கோயிலில் மாலைக் கால வழிபாடு விசேஷமாகச் சொல்லப்படுகிறது.

Specialities

  • இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.
  • பழைய நூலில் சுவாமியின் பெயர் 'தேவீச்வரர்' என்று உள்ளதாக தெரிகிறது.
  • கொடி மரத்தின் மேற்புறத்தில் ராசிகளும் நவக்கிரகங்கள் அமைந்துள்ளன.
  • கேரள கலைப் பாணியில் முகப்பு மண்டபம் ஓடு வேயப்பட்டுள்ளது.
  • இக்கோயில் கட்டுமானத்திற்கு உதவிய ஆட்கொண்டான் செட்டியார் ஆளுயரச் சிற்பம் உள்ளது. 

  • இங்குள்ள கல்வெட்டுக்களில் கோயிலுக்கு மானியங்களை அளித்த செய்திகள் குறிக்கப்பட்டுள்ளன.
  • கல்வெட்டுகள்:
    இக்கோயிலில் 5 கல்வெட்டுகள் உள்ளன. இவற்றில் மிகப்பழைய கல்வெட்டு 1458 ஆம் ஆண்டினது. அம்மன் கருவறை தென்புறச்சுவரில் உள்ள இக்கல்வெட்டு இக்கோயில் மூலவரை நயினார் என்றும் அம்மனை நாச்சியார் அழகிய மங்கை என்றும் குறிப்பிடுகிறது. இது நிபந்தக்கல்வெட்டு, வேணாட்டு அரசனை வென்று மண்கொண்ட பூதவவீர இரவிவர்மனின் நிபந்தக் கல்வெட்டு உண்டு. (1520) இந்த அரசன் பறக்கை, கிருஷ்ணன் கோவில் என பல கோயில்களில் கட்டுமானம் செய்தவன். இவன் காலத்தில் இக்கோயில் கட்டுமானம் நடத்திருக்கலாம்.
    கிபி 19 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு கிழக்கு வெளிப்பிரகாரம், கொடிமரம் இருக்கும் பகுதி ஆகியன கட்டப்பட்டது என்று கூறுகிறது.
  • திருவிழா:
    மாசி மாதம் மகம் நட்சத்திரம் 10 ஆம் நாள் வரும்படியாகக் கொடியேறும். 10 நாட்கள் திருவிழா 9 ஆம் நாள் தேரோட்டம் 10 ஆம் நாள் ஆறாட்டு ஒழுகினசேரி அம்மன் கோயிலுக்குச் செல்லும்.
    ஐப்பசி திருக்கல்யாணம், கந்தசஷ்டி போன்ற நிகழ்வுகளும் உண்டு.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரியிலிருந்து - நாகர்கோயிலுக்கு பேருந்து வசதிகள் நிரம்ப உள்ளன. நாகர்கோயில் திருவள்ளுர் பேருந்து நிலைத்திற்கு எதிரில், வலப்புறம் உள்ள சிறிய தெருவில் (வடிவீஸ்வரம் கிராமத்தில்) கோயில் உள்ளது.

Related Content