logo

|

Home >

hindu-hub >

temples

நற்குன்றம் (தின்னகோணம்) Narkundram (Thinnakonam)

இறைவர் திருப்பெயர்: பசுபதீஸ்வரர்.

இறைவியார் திருப்பெயர்: கோவிந்தவல்லி.

தல மரம்:

தீர்த்தம் :

வழிபட்டோர்:

Sthala Puranam

  • இத்தலம் சம்பந்தர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.
  • வைப்புத்தலப் பாடல்கள்		: சம்பந்தர் - நெற்குன்றம் ஓத்தூர் (2-39-9). 

Specialities

  • மிகப் பழமையான கோயில்.

     

  • சுவாமி - பசுபதீஸ்வரர்; பழைய நூலில் 'சடனாண்டார்' என்றும்; அம்பாள் - கோவிந்தவல்லி; சிவகாமசுந்தரி என்றும் உள்ளது.

     

  • கோயில் மற்றும் இறைவனின் பெயர்கள் காலப்போக்கில் மாறிப்போயுள்ளன. முதற்பராந்தகச் சோழனின் கல்வெட்டில் இவ்வூர் "திருவிரற்குன்றம்" என்றும், "திருநற்குன்றம்" என்றும், சுவாமியின் பெயர் "திருமாடத்துக் கூனனார்" என்றும், "சடனாண்டார்" என்றும் குறிக்கப்பட்டுள்ளது என்பர் ஆய்வர் பெருமக்கள்.

     

  • கோயிலில் உள்ள கல்வெட்டுக்களில் ஒன்றில் ஊர்ப் பெயர் 'தின்னக்கோணம்' என்றும், மற்றொன்றில் 'தின்னக்குணம்' என்றும் பொறிக்கப்பட்டுள்ளது.

     

  • சுவாமி கருவறை கஜப்பிரஷ்ட அமைப்புடையது; பழையக் காலக் கற்றளி.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு முசிறியிலிருந்து வேளக்கா நத்தம் சாலையில் சென்று - ஏவூர் என்னுமிடத்தில் பிரியும் சாலையில் சென்றால் நாச்சம்பட்டியை அடுத்து "தின்னகோண"த்தை அடையலாம். முசிறியிலிருந் 15 கி.மீ. நகரப் பேருந்து செல்கிறது.

Related Content