logo

|

Home >

hindu-hub >

temples

திண்டீச்சரம் (திண்டிவனம்) Thindeechuram (Tindivanam)

இறைவர் திருப்பெயர்: திந்திரிணீஸ்வரர்.

இறைவியார் திருப்பெயர்: மரகதவல்லி, மரகதாம்பாள்

தல மரம்:

தீர்த்தம் :

வழிபட்டோர்: வால்மீகி, வியாசர், டிண்டி, முண்டி,கில்லி, கில்லாலி ஆகிய முனிவர்கள்

Sthala Puranam

  • தற்போது திண்டிவனம் என வழங்கும் ஊராகும்.

     

  • கோயில் உள்ள தெருவுக்கு ஈசுவரன் கோயில் தெரு என்றே பெயர்.

     

  • மக்கள் 'ஈசுவரன் கோயில்' என்றும் 'திந்திரிணீஸ்வரர் கோயில்' என்றும் வழங்குகின்றனர்.

     

  • திந்திருணி, புளிதிந்திருண்வனம் - புளியமரக்காடு, இச்சொல் மருவி வழக்கில் திண்டிவனம் என்றாயிற்று. புளியமரக் காடுகளால் சூழப்பட்ட பகுதி என்று பெயர்.

  • வைப்புத்தலப் பாடல்கள்		: அப்பர் - 1. தெள்ளும் புனற்கெடில (6-7-8), 
    					   2. திண்டீச்சரஞ் சேய்ஞலூர் (6-70-9). 

Specialities

  • இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.

     

  • மூலவர் சுயம்பு மூர்த்தி; சிவலிங்கத் திருமேனி.

     

  • பெரிய கோயில்; கீழ்ப்புறம் கருங்கல்லாலும் மேற்புறம் செங்கல்லாலும் கட்டப்பட்ட கட்டுமானமுடையது.

     

  • இத்தலம் வால்மீகி, வியாசர், டிண்டி, முண்டி, கில்லி, கில்லாலி ஆகிய முனிவர்களால் பூசிக்கப்பட்டது.

     

  • இக்கோயிலின் விமானம் வியாச முனிவரால் தாபிக்கப்பட்டது.

     

  • இச்சிவாலயக் கல்வெட்டில் இவ்வூர் "ஓய்மாநாட்டு..... திருத்தீண்டீஸ்வரம்" என்று குறிக்கப்பட்டுள்ளது.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் செல்லும் எல்லா பேருந்துகளும் திண்டிவனம் வழியாகச் செல்கின்றன.

Related Content