logo

|

Home >

hindu-hub >

temples

Om symbol

திங்களூர்

Om symbol

இறைவர் திருப்பெயர்: கயிலாசநாதர்.

இறைவியார் திருப்பெயர்: பெரியநாயகி.

தல மரம்:

தீர்த்தம் :

வழிபட்டோர்:

Loading map...

Sthala Puranam

Specialities

  • அப்பூதியடிகள் அவதரித்த பதி. அவதாரத் தலம் : திங்களூர். வழிபாடு : குரு வழிபாடு. முத்தித் தலம் : திங்களூர். குருபூசை நாள் : தை - சதயம்.

 

அப்பூதியடிகள் வைத்துத் தொண்டு செய்த "ஈறில் பெருந் தண்ணீர்ப் பந்தல்" - பிரதான சாலையில் உள்ள முனியாண்டார் கோயிலின் கீழ்ப்புறம் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இப்போதும் சிறு மண்டபம் உள்ளது.

திருக்கோயில் உள்மண்டபத்தில் இடப்புறம் அப்பூதியடிகள், அவருடைய மனைவியார், மூத்த திருநாவுக்கரசு, இளைய திருநாவுக்கரசு ஆகியோர் மூர்த்தங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

திருநாவுக்கரசு பெருமான் ஒன்றுகொலாம் எனத் தொடங்கும்  விடந்தீர்த்ததிருப்பதிகம் இத்திருக்கோயிலின் இராஜ கோபுரம் முன்பு அருளப்பட்டது என்பதை தெய்வச்சேக்கிழார் பெருமான் அருளிய திருநாவுக்கரசு நாயனார் புராணம் 208 ஆம் பாடல் மூலமாக அறிகிறோம். 

சந்திர தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து கோயிலின் முன்புள்ள சந்திர தீர்த்தத்தில் நீராடி, பரிகாரம் செய்து கொள்வது இன்றும் நடைமுறையில் உள்ளது.

Contact Address

அமைவிடம் அ/மி. கயிலாசநாதர் திருக்கோயில், திங்களூர் வழி, திருபுவனம், திருவையாறு - 613 204. தொலைபேசி : 04362 - 262499. மாநிலம் : தமிழ் நாடு திருவையாறு - கும்பகோணம் பேருந்துச் சாலையில் திருப்பழனத்திற்கு முன்பாகவே, சாலையில் "திங்களூர்" என்று கைகாட்டி உள்ள இடத்தில் அது காட்டும் திங்களூர் பாதையில் சென்றால் திங்களூரை அடையலாம்.
Loading map...

Related Content

திருப்பந்தணைநல்லூர் (பந்தநல்லூர்)

திருமங்கலக்குடி

திருந்துதேவன்குடி (நண்டாங்கோயில் / திருத்தேவன்குடி) (திருவிச

திருவியலூர் (திருவிசநல்லூர் / திருவிசலூர்)

திருக்கொட்டையூர் திருக்கோயில் தலவரலாறு