இறைவர் திருப்பெயர்: சப்தரிஷீஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர்: மஹாசம்பத் கௌரி.
தல மரம்:
தீர்த்தம் :
வழிபட்டோர்: மகாலட்சுமி, சப்த ரிஷிகள் (வசிட்டர், அத்ரி, பிருகு,புலத்தியர், கௌதமர், ஆங்கீரசர், மரீச�
Sthala Puranam
வைப்புத்தலப் பாடல்கள் : அப்பர் - கயிலாயமலை யெடுத்தான் (6-71-11).
Specialities
இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.
வசிட்டர் முதலிய ஏழு (வசிட்டர், அத்ரி, பிருகு, புலத்தியர், கௌதமர், ஆங்கீரசர், மரீசி) முனிவர்கள் வழிபட்ட தலம்.
வழிபட்ட முனிவர்களின் திருவுருவங்கள் கோயிலில் உள்ளன.
தாண்டகத்தில் இத்தலம் எழுவர் தவத்துறை என்று குறிக்கப்படுகிறது.
நால்வர் பெருமக்களையொட்டி, நாயன்மார்களின் மூலத் திருமேனிகள் வரிசையாக உள்ளன.
கருவறையின் வெளிப்புறத்தில் மேலும் கீழும் நிரம்ப கல்வெட்டுக்கள் உள்ளன. இடையில் யானை - யாளி சிற்பங்கள் சுற்றிலும் வரிசையாக உள்ளன.
சக்தி விநாயகரின் பக்கத்தில் தலத்துத் திருப்புகழ்க் கல்வெட்டுள்ளது.
தியாகப் பிரம்மம் இங்கு வந்துத் தங்கிப் பாடியுள்ள ஐந்து கீர்த்தனைகளும் கல்வெட்டில் பதிக்கப்பட்டுள்ளன.
தலத்துக்குரிய பிள்ளைத்தமிழ்ப் பாடல்கள் அம்பாள் சந்நிதியில் உட்புறச் சுவரில் பதிக்கப்பட்டுள்ளன.
Contact Address