இறைவர் திருப்பெயர்: ஆனந்த தாண்டவரேஸ்வரர், கல்யாண சுந்தரேஸ்வரர், பஞ்சவடீஸ்வரர், பாரிஜாதவனேஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர்: பிருகந்நாயகி, கல்யாண சுந்தரி.
தல மரம்:
தீர்த்தம் : அமிர்த பிந்து தீர்த்தம்.
வழிபட்டோர்:பரத்வாஜ மகரிஷி, ஆநந்த முனிவர், மானக்கஞ்சாற நாயனார்.
Sthala Puranam
இங்கு வாழ்ந்திருந்த ஆநந்த முனிவர் என்பவர் காலையில் சேதுஸ்நானமும் அர்த்த சாமத்தில் சிதம்பர நடராச தரிசனமும் செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார். ஒரு நாள் நீராடி முடித்துத் தரிசனத்திற்குச் செல்லுங்கால் மழையாலும் இரவாலும் தடையேற்பட, தாங்கிக் கொள்ள முடியாத முனிவர் தன்னுயிரைப் போக்கிக் கொள்ள ஒரு மரத்தில் சுருக்கிட்டுக் கொள்ள, நடராசப்பெருமான் அவருடைய முகத்திற்கு நேரே திருவடியைக் காட்டி, ஆனந்த தாண்டவம் செய்தருளினார். ஆதலின் இங்குள்ள நடராசர் "ஆனந்த தாண்டவ நடராசர்" என்றழைக்கப்படுகிறார்.
Specialities
மானக்கஞ்சாறரை ஆட்கொள்ள மாவிரதியார் கோலத்தில் வந்த இறைவனின் உருவம் வலப்பால் - ஜடாநாதர் சந்நிதி. தன் மகள் கூந்தலை அறுத்துத் தந்த மானக்கஞ்சாற நாயனார் திருமேனியும் அவர் மகள் திருமேனியும் இச்சந்நிதியில் உள்ளது.
மானக்கஞ்சாறரின் மனைவி பெயர் கல்யாணசுந்தரி என்றும், நாயனாருக்கு மானகாந்தன் என்று பெயருண்டு என்பது தல புராணத்தில் தெரிய வருகின்றது.
Contact Address