இறைவர் திருப்பெயர்: | பிரம்மபுரீசுவரர் |
---|---|
இறைவியார் திருப்பெயர்: | கற்பகாம்பாள் |
தல மரம்: | |
தீர்த்தம் : | |
வழிபட்டோர்: |
அவதாரத் தலம் : எயினனூர் வழிபாடு : சங்கம வழிபாடு. முத்தித் தலம் : எயினனூர். குருபூசை நாள் : புரட்டாசி - உத்திராடம்.
ஏனாதிநாத நாயனார் அதிசூரனுடன் போர் புரிந்த இடம் தற்போது ஏனநல்லூ (எயினனூர்)ரிலிருந்து மேற்கே சிறிது தொலைவில் உள்ள மேலத்தெருவாகும். போர் புரிந்த திடல் சிறுகச் சிறுகச் சுருங்கி தற்போது இல்லையெனும் அளவுக்கு உள்ளது. (2010-07-02).
அமைவிடம் அ/மி. பிரம்மபுரீசுவரர் திருக்கோயில், ஏனநல்லூர், மருதாந்தநல்லூர் (வழி), கும்பகோணம், தஞ்சாவூர் மாவட்டம். தொலைபேசி : +91-9751734599. மாநிலம் : தமிழ் நாடு கும்பகோணம் - மன்னார்குடி சாலையில் கருவளர்ச்சேரி பிரிவில் சென்று மருதாந்தநல்லூரைக் கடந்துச் சென்றால், தற்போது ஏனநல்லூர் என்னும் எயினனூர் உள்ளது.