logo

|

Home >

hindu-hub >

temples

குருக்கேத்திரம் - (குருக்ஷேத்ரம்) Kurukshetra

இறைவர் திருப்பெயர்: பரமேச்வரர்

இறைவியார் திருப்பெயர்: பார்வதி

தல மரம்:

தீர்த்தம் :

வழிபட்டோர்:

Sthala Puranam

  • இத்தலம் சுந்தரர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.

     

  • பாரதப் போர் நிகழ்ந்த பூமி.
  • gurushethra temple
  • வைப்புத்தலப் பாடல்கள்		: சுந்தரர் - தளிசாலைகள் தவமாவது (7-78-6). 

Specialities

  • பாண்டவர்கள் வெற்றி பெற்ற புண்ணிய பூமி.

     

  • பகவத் கீதை பிறந்த பெருமையுடைய தலம்.

     

  • தீர்த்த விசேஷம் உள்ள இடம். இந்தியாவிலேயே பெரிய குளம் / தீர்த்தம் - 'பிரமசரஸ்'; 11 ஏக்கர் பரப்பில் மிகப் பரந்துள்ளது.

     

  • இத்தலத்திற்கு தர்மக்ஷேத்ரம், பிரம்ம க்ஷேத்ரம், ஆர்யாவர்த்தம், உத்தரவேதி முதலிய வேறு பெயர்களுண்டு.

     

  • சரஸ்வதி, திருஷத்வதி ஆகிய நதிகளுக்கு இடையில் இத்தலம் உள்ளது.

     

  • மாபெரும் ரிஷிகளும், மகான்களும் இங்குத் தவம் செய்து வாழ்ந்துள்ளனர்.

     

  • வியாசர் பாரதத்தையும், மனு, மனுஸ்மிருதியையும் இங்கிருந்து தான் எழுதியதாகச் சொல்லப்படுகிறது.

     

  • ததீசி முனிவர் தன் முதுகெலும்பை இந்திரனுக்குத் தர, அதைக் கொண்டு இந்திரன் விருத்திராசூரனைக் கொன்றதும்; பரசுராமர் பீஷ்மர் யுத்தம் நடந்ததும் இத்தலத்தில் தான்.

     

  • குந்தி தேவி வழிபட்ட சிவாலயம் இங்குள்ளது. கருவறையில் சிவலிங்கத்தின் பின்னால் குந்தியின் உருவம் உள்ளது.

     

  • கீதோபதேசம் நடைபெற்ற இடத்தில் பெரிய ஆலமரம் உள்ளது. இதனடியில் உபதேசக் காட்சி பளிங்கில் சித்தரிக்கப்பட்டுள்ளது.

     

  • அருச்சுனன் தன் அம்பினால் - பாணத்தால் உண்டாக்கிய தீர்த்தக் கிணறு - 'பாண கங்கா' உள்ளது.

Contact Address

அமைவிடம் மாநிலம் : ஹரியானா புது டில்லியிலிருந்து செல்ல ரயில் / பேருந்து வசதியுள்ளது.

Related Content