இறைவர் திருப்பெயர்: | சுக்ரீஸ்வரர். |
---|---|
இறைவியார் திருப்பெயர்: | ஆவுடைநாயகி |
தல மரம்: | |
தீர்த்தம் : | |
வழிபட்டோர்: | சுக்ரீவன் |
இராமருக்கு உதவியாக இருந்த சுக்ரீவனும், அநுமனும் இம்மண்ணில் லிங்கம் ஸ்தாபித்து ஈசனை வழிபட்டனராம்.
இங்குள்ள விவசாயி ஒருவரின் குடும்பத்தில் ஒருவர் வாய் பேசாதவராகப் பிறப்பது வழி வழியாகத் தொடர்ந்து இருந்ததாம். இதற்கு காரணமாகச் சொல்லப்படுவது, நந்தி தேவர், இங்குள்ள தோட்டப் பயிர்களை மேய்ந்த போது, விவசாயி அது கண்டு கோபமுற்று, நந்தியின் இரு காதுகளையும் அறுத்து விட்டாராம். இப்பாவம் அவ்விவசாயியை வழி வழியாக தொடர்வதாக சொல்லப்படுகிறது. இதற்குப் பிராயசித்தமாக, அருகில் ஒரு நந்தி பிரதிஷ்டை செய்யப்பட்டு, அதன் மூலம் அக்குறை நீங்கியதாம்.
வைப்புத்தலப் பாடல்கள் : சுந்தரர் - கொங்கிற் குறும்பிற் (7-47-2).
கல்வெட்டில் இவ்விறைவன், 'ஆளுடைய பிள்ளை' என்று குறிக்கப்படுகிறார். இவ் ஈசனை மக்கள் 'மிளகீசன்' என்றும் அழைக்கின்றனர்.
உடலில் 'மரு' உள்ளவர்கள் இப்பெருமானுக்கு மிளகைப் படைத்து, அதில் சிறிதளவு மிளகை எடுத்து வந்து 8 நாள்களுக்கு உணவில் சேர்த்துச் சாப்பிட்டால் 'மரு'க்கள் மறைந்துவிடும் என்று மக்கள் சொல்கின்றனர்.
அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு திருப்பூர் - ஊத்துக்குளி பாதையில் திருப்பூரிலிருந்து 8வது கி.மீ. தொலைவில் (சர்க்கார்) பெரிய பாளையம் உள்ளது. ஊத்துக்குளியிலிருந்து நகரப் பேருந்து செல்கிறது.