இறைவர் திருப்பெயர்: | அசலதீபேஸ்வரர் |
---|---|
இறைவியார் திருப்பெயர்: | மதுகரவேணி |
தல மரம்: | வில்வம் |
தீர்த்தம் : | குமரித்துறை எனப்படும் அகண்ட காவிரி. |
வழிபட்டோர்: |
1. "அகண்ட காவிரியின் கரையில் சிவாலயம் உள்ளது இதுவே குமரிக் கொங்கு என்று அப்பர் க்ஷேத்திரக் கோவையில் குறிப்பிடும் தலம்" என்றும், "மோகனூர் சிவபெருமானுக்குக் "குமரீசர்" என்று பெயராதலால் இவ்வூர் மோகனூராக இருத்தல் வேண்டும்" என்றும் சொல்லப்படுகிறது.
எனவே, "குமரிக் கொங்கு", "கொங்கு குமரித்துறை" ஆகிய இரண்டும் ஒன்றே என்பதும், அது இன்று வழங்கும் 'மோகனூரே' என்பதும் புலனாகிறது.
'ஞானப் பழம்' கிடைக்கவில்லை என்று கோபித்து வந்த முருகனைத் தேடி, சுவாமியும் அம்பிகையும் வந்தபோது, இவ்வூரில் முருகனைக் கண்டு மகிழ்ந்தனராம். ஆதலின் இது "மகனூர்" என்பது மருவி "மோகனூர்" என்றாயிற்று என்பது ஒரு செவி வழிச் செய்தியாகவுள்ளது.
வைப்புத்தலப் பாடல்கள் : சம்பந்தர் - குத்தங் குடிவே திகுடி (2-39-10).
மூலத்தானத்தில் - சுவாமிக்கு முன்னிலுள்ள தீபம், எவ்வளவு காற்றடித்தாலும் அசைவதில்லை. எனவே சுவாமிக்கு 'அசலதீபேஸ்வரர்' என்று பெயருண்டாயிற்று.
அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு நாமக்கல்லுக்குப் பக்கத்தில் உள்ள ஊர். நாமக்கல்லிலிருந்து மோகனூருக்கு அடிக்கடி பேருந்துகள் உள்ளன.