logo

|

Home >

hindu-hub >

temples

திருக்காரிக்கரை (ராமகிரி) Thirukkarikkarai (Ramagiri)

இறைவர் திருப்பெயர்: வாலீஸ்வரர்.

இறைவியார் திருப்பெயர்: மரகதாம்பாள்.

தல மரம்:

தீர்த்தம் : நந்தி தீர்த்தம்.

வழிபட்டோர்: அநுமன்.

Sthala Puranam

  • (காவேரி) காரியாற்றின் கரையிலுள்ள ஊர். எனவே 'காரிக்கரை' என்றாயிற்று.

     

  • தற்போது மக்கள் "ராமகிரி" என்று அழைக்கின்றனர். அழகிய பசுமை நிறைந்த சிற்றூர்.
    வைப்புத்தலப் பாடல்கள்		: சுந்தரர் - கடங்களூர் திருக்காரிக் (7-31-3). 
  • இராம பிரானின் கட்டளைப்படி சேதுவில் பிரதிஷ்டை செய்ய ஆஞ்சநேயர் வடக்கிருந்து சிவலிங்கத்தை கொண்டு வரும்போது, அதைத் தன்னிடத்தில் இருத்திக் கொள்ள பைரவர் எண்ணி அதற்கோர் வழியை மேற்கொண்டார். அதன்படி ஆஞ்சநேயருக்கு தண்ணீர் தாகம் ஏற்பட்டது. சிவலிங்கத்தைத் தரையில் வைக்கக் கூடாதென்று எண்ணி, சிறுவனாக அங்கு வந்த பைரவரிடம் தந்துவிட்டு நீர்ப் பருகச் சென்றார். அவர் குளத்தில் இறங்கி நீர் பருகி வருவதற்குள், பளுவாக உள்ளதென்று சொல்லிச் சிறுவன் பூமியில் வைத்துவிட்டான். கோபமுற்ற ஆஞ்சநேயர் அச்சிவலிங்கத்தைத் தன் வாலால் சுற்றிப் பலமாக இழுத்தார் - பயனில்லை. சிவலிங்கம் சற்று சாய்ந்ததே தவிர அதைப் பெயர்த் தெடுக்கமுடியவில்லை. ஆதலின் பொருமான் இங்கேயே பிரதிஷ்டையானார். வாலால் சுற்றியிழுக்கப்பட்டமையால் சுவாமி - வாலீஸ்வரர் என்னும் பெயர் பெற்றார். ஆஞ்சநேயர் கோபத்தில் வீசிய மலையே இதற்கு முன்பு இங்கிருந்த 'காளிங்கமடு' என்னும் நீர் நிலையில் விழுந்து, அதனால் நீர் நிலையழிந்து மலையேற்பட்டது.

     

  • இராமரின் பூசைக்காக எடுத்து வரப்பட்ட சிவலிங்கம் பிரதிஷ்டையானதால் "ராம்" என்பதும்; நீர் நிலை மறைந்து மலை ஏற்பட்டதால் "கிரி" என்பதும் சேர்ந்து இப்பகுதி பிற்காலத்தில் "ராமகிரி" என்று வழங்கலாயிற்று.

Specialities

  • இத்தலம் சுந்தரர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.

     

  • திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் இத்தலத்தை வழிபட்டுச் சென்றதாகப் பெரியபுராணம் கூறுகிறது. ஆனால் அவர்கள் பாடிய பதிகங்கள் எதுவும் கிடைக்கவில்லை.

     

  • பழமையான பெரிய சிவாலயம். இத்தலம் கால பைரவத் தலம் என்றுப் போற்றப்படுகிறது.

     

  • இங்குள்ள நந்தியின் வாயிலிருந்து இடையறாது நீர் கொட்டிக் கொண்டேயுள்ளது. இந்நீர் (தீர்த்தக்) குளத்தில் நிரம்பி 'காரியாறு' என்றும் பெயருடன் ஓடுகிறது.

     

  • இங்கு கால பைரவர் புத்திரபாக்யம் தரும் பெருமை வாய்ந்தவராகத் திகழ்கிறார்.

     

  • மூலவர் - வாலீஸ்வரர்; சுயம்பு மூர்த்தி; சற்று சாய்ந்த நிலையில் உள்ளார். வாலால் சுற்றியிழுத்த தழும்புகள் திருமேனியில் உள்ளன.

     

  • பல்லவர் காலக் கோயில் - சிதிலமாகியதால் பிற்காலச் சோழர்களும் விஜய நகர மன்னர்களும் சீர்ப்படுத்தியுள்ளனர்.

     

  • சங்கமகுல விரூபாட்சராயன் இதற்குக் கோபுரம் கட்ட முயன்றபோது, புருஷோத்தம கஜபதி என்பவனின் திடீர் படையெடுப்பால் அப்பணி நின்று கோயிற்று.

     

  • வீர ராசேந்திர சோழன் என்பவன் சாளுக்கியருடன் போரிட்டு, வென்று, திரும்பும் வழியில் இக்கோயிலுக்கு நன்கொடைகள் வழங்கியதாகக் கல்வெட்டொன்றால் அறிகிறோம்.

     

  • 'சயங்கொண்ட சோழமண்டலத்துக் குன்றவர்த்தனக் கோட்டத்து நின்றையூர் நாட்டு நடுவின் மலை திருக்காரிக்கரைப் பிள்ளையார்' என்று கல்வெட்டால் தெரியவருகிறது.

Contact Address

அமைவிடம் மாநிலம் : ஆந்திரா ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் நாகலாபுரத்திற்கு அடுத்து உள்ளது.

Related Content