இறைவர் திருப்பெயர்: செங்கல்வராயன் சுவாமி
இறைவியார் திருப்பெயர்:
தல மரம்:
தீர்த்தம் :
வழிபட்டோர்:
Sthala Puranam
திருத்தணி மலை மீது சென்று, கோயிலை வெளிச்சுற்றில் மலையில் வலம் வரும் போது, கோயிலின் கருவறைக்கு நேர் பின்னால் உள்ள படிகளின் வழியே இறங்கியதும் இடப்பால் குளம் ஒன்று உள்ளது. வலப்பால் ஒரு சிறிய மண்டபமும் அதனுள் சந்நிதி உள்ளது. இச்சந்நிதியில் முதலில் சிவலிங்கமூர்த்தமும் அதனையடுத்து உள்ளே விநாயகரும் காட்சியளிக்கின்றனர். இக்கோயிலில் உள்ள சிவலிங்க மூர்த்தத்தைச் "செங்கழுநீர் வரை அரையன்" என்றும், இப்பெயர் பேச்சு வழக்கில் மாறி "செங்கல்வராயன்" என்றும் அழைக்கின்றனர். இச்சிறிய மண்டபக் கோயிலே (செங்கல்வராய சுவாமி எழுந்தருளியுள்ள சந்நிதியே) கழுநீர்க்குன்றம் என்னும் வைப்புத் தலமாகும்.
வைப்புத்தலப் பாடல்கள் : அப்பர் - பன்மலிந்த வெண்டலை (6-13-4).
Specialities
திருத்தணி மலையில் பிறரால் எளிதில் அறிய முடியாதவாறு விளங்குகின்ற சிவலிங்க மூர்த்தமே அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.
திருத்தணி இன்று முருகப் பெருமானின் தலமாகப் போற்றப்பட்டுப் பெருஞ் சிறப்புடன் விளங்குகிறது. இத்தலத்திற்கு 'காவியங்கிரி' என்றொரு பெயருமுண்டு. 'காவி' எனப்படும் குவளை மலர் பூத்து குலுங்குகின்ற மலை என்பது பொருளாகும். இது போன்றே திருத்தணி மலையே கழுநீர் - செங்கழுநீர் மலர் பூத்து விளங்கும் மலையாகப் போற்றப்படுகிறது.
Contact Address