இறைவர் திருப்பெயர்: வசிஷ்டேஸ்வரர் என்கின்ற கருணாசுவாமி.
இறைவியார் திருப்பெயர்: பெரியநாயகி
தல மரம்:
தீர்த்தம் : வசிஷ்ட தீர்த்தம்.
வழிபட்டோர்:வசிஷ்டர்
Sthala Puranam
மக்கள் வழக்கில் 'கரந்தட்டாங்குடி' என்று வழங்குகிறது. தஞ்சையின் ஒரு பகுதியாகிய 'கரந்தை' என்பதே இவ்வாறு பெயர் மாறியுள்ளது.
கோயிலுக்கு எதிரில் உள்ள குளத்தில் நீராடி கரிகாலன் கருங்குஷ்டம் நீங்கப் பெற்றதால் அவனுக்கு அருள்புரிந்த இறைவனுக்கு கருணாசுவாமி என்ற பெயரும் வழங்கலாயிற்று.
Specialities
இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.
கருங்கல் கோயில்; வாவல் நெற்றி மண்டப அமைப்பில் உள்ளது; கரிகாற் சோழன் திருப்பணி; சிற்பச் செறிவுடன் விளங்குகிறது.
இக்கோயில் கல்வெட்டுக்களில் 'கருந்திட்டைக்குடி' என்றும்; 'கருவிட்டக்குடி மகாதேவர்' என்றும் குறிக்கப்பட்டுள்ளது.
வசிஷ்ட தீர்த்தத்தில் தொடர்ந்து 45 நாள்கள் மூழ்கி, வசிஷ்டேஸ்வரரை வழிபட்டால் கருங்குட்டம் முதலான சரும நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை.
![]() | ![]() |
![]() | ![]() |
Contact Address