logo

|

Home >

hindu-hub >

temples

கடம்பை இளங்கோயில் (கீழக்கடம்பூர்) Kadampai ilangkoil (Kizhakkatampur)

இறைவர் திருப்பெயர்: உத்ராபதீஸ்வரர்.

இறைவியார் திருப்பெயர்:

தல மரம்:

தீர்த்தம் :

வழிபட்டோர்:

Sthala Puranam

  • உத்ராபதி கோயில் என்று மக்கள் இக்கோயிலை சொல்கிறார்கள்.

     

  • கோயிலைப் புதுப்பிக்கும்போது, நித்திய வழிபாடு தடையின்றி நடைபெறும் பொருட்டு மூர்த்தியை வேறொரு இடத்தில் எழுந்தருளச் செய்து அமைத்த கோயில் இளங்கோயில் எனப்படும். இடைக்கால வழிபாட்டுக்கென அமைத்த இந்தக் கோயிலைப் பாலாலயம் என்றும் வழங்குவர். இவையும் தேவார ஆசிரியர்களால் பாடப் பெற்றமையின் நிலையான தனிக் கோயிலாக இன்றும் விளங்குவதைக் காணலாம். (மீயச்சூர் இளங்கோயில், கடம்பூர் இளங்கோயில் என்பன இவ்வகையின.)

     

  • கீழ்க்கடம்பூர் என்பதே கடம்பை இளங்கோயில் எனப்படுவது.
  • வைப்புத்தலப் பாடல்கள்	: அப்பர் - 1. கொடுங்கோளூர் அஞ்சைக் (6-70-5), 
    					  

Specialities

  • இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.

     

  • அப்பர் காலத்தில் பெருங்கோயில், கரக்கோயில், ஞாழற்கோயில், சொகுடிக் கோயில், இளங்கோயில், மணிக்கோயில், ஆலக்கோயில் எனப் பலவகையான கோயில்கள் இருந்தன என்று அவர்தம் (6-71-5) பொருப்பள்ளி வரைவில்லாப் என்ற பாடலால் அறிகிறோம்.

     

  • முற்றிலும் இடிந்த நிலையிலுள்ள இக்கோயிலைக் காணும்போது, முன்பொரு காலத்தில் சிற்பக் கலை ததும்ப மக்கள் மனதைக் கவர்ந்த திருக்கோயிலாக விளங்கியிருத்தல் வேண்டும் என்பது திண்ணம்.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு சிதம்பரம் - காட்டு மன்னார்குடிச் சாலையில், காட்டு மன்னார்குடியிலிருந்து எய்யலூர் வழியில் வரும்போது கீழக்கடம்பூரை அடையலாம்

Related Content

Thirumiyachur ilankoyil