இறைவர் திருப்பெயர்: கைலாசநாதர்.
இறைவியார் திருப்பெயர்: பெரியநாயகி.
தல மரம்:
தீர்த்தம் :
வழிபட்டோர்:
Sthala Puranam
இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.
வைப்புத்தலப் பாடல்கள் : அப்பர் - நாடகமா டிடநந்தி (6-71-8).
Specialities
பெரிய சிவாலயம்; சிவப்புக் கல் கட்டிடம். கோயில் முழுவதும் சிவப்பு வண்ணத்தில் காட்சியளிக்கிறது.
கோயிலுக்கு எதிரில் நீராழி மண்டபத்துடன் கூடிய தீர்த்தக் குளம் உள்ளது.
மிகப் பெரிய ராஜ கோபுரம், விசாலமான முன் மண்டபம், மேற்புறத்தில் சிலவிடங்களில் அழகிய கொடுங்கைகள் உள்ளன. சிறந்த கல் வேலைப்பாடமைந்த பழைமையான கோயில்.
மண்டபத்தின் இடப்பால் சம்பந்தர், அப்பர், சுந்தரர் சந்நிதியுள்ளது. பெரிய நந்தி உள்ளார்.
வெளிப் பிராகாரத்தில் தலமரம் - இலந்தை உள்ளது.
நீளமான முன்மண்டபத்துடன் அமைந்துள்ள சொக்கநாதர் மீனாட்சி சந்நிதியிலுள்ள கல்தூண் சிற்பங்கள் அழகான வேலைப்பாடுடையன.
திருவாதிரை மண்டபத்தில் கல்பீடத்தில் நடராச சபை அமைந்துள்ளது.
மூலவர் - சற்று உயரமான பாணத்துடன் காட்சித் தருகிறார்.
(தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாளில் உள்ள ஊருடையப்பர் கோயிலில் உள்ள கல்வெட்டில் தலப்பெயர் 'அஜனீஸ்வரம்' என்றுள்ளதால், இதை 'அயனீஸ்வரம்' என்பாருமுளர்.)
Contact Address