இறைவர் திருப்பெயர்: சுந்தரேஸ்வரர்
இறைவியார் திருப்பெயர்: அகிலாண்டேஸ்வரி.
தல மரம்:
தீர்த்தம் : லட்சுமி தீர்த்தம்.
வழிபட்டோர்:பிருகு முனிவர், தேவகுரு முதலியோர்
Sthala Puranam
முதலாம் ராசராசனின் மனைவியருள் ஒருத்தி - திரைலோக்ய மாதேவி; சுவாமி - சுந்தரேஸ்வரர்; இவையிரண்டும் சேர்ந்து "திரைலோக்ய சுந்தரம்" என்று பெயர் வழங்கியுள்ளது போலும்.
வைப்புத்தலப் பாடல்கள் : அப்பர் - எச்சில் இளமர் ஏம (6-70-4).
Specialities
இத்தலத்தில் இரண்டு கோயில்கள் உள்ளன. அவற்றுள் சுந்தரேஸ்வரர் கோயிலே திருவிசைப்பா பாடல் பெற்றதாகும்.
லிங்கம் ஒன்றுள்ளது - இஃது ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. புதுமையாகவும் அற்புதமாகவும் உள்ள இது போன்று காண்பது அரிது.
(இங்குள்ள கோட்டூர் என்பது திருமறைத்தலமன்று. இது வேறு.) முதலாம் இராசராசன் காலத்தில் கோட்டூரும், திரைலோக்கி சுந்தரமும் ஒன்றாக இருந்திருக்க வேண்டும். தற்போது 'திருலோக்கி' தனிக் கிராமமாகவுள்ளது. கோட்டூர் இன்று "துகிலி" என்று வழங்குகிறது.
இவ்வூர் 'மண்ணிநாட்டு ஏமநல்லூராகிய திரைலோக்கிய மாதேவிச் சதுர்வேதி மங்கலம்' எனக் கல்வெட்டுக்களில் குறிப்பிடப்படுகிறது
Contact Address