logo

|

Home >

hindu-hub >

temples

ஊற்றத்தூர் (ஊட்டத்தூர்) Vootrathur (Voottathur)

இறைவர் திருப்பெயர்: சுத்தரத்னேஸ்வரர், தூயமாமணீஸ்வரர்

இறைவியார் திருப்பெயர்: அகிலாண்டேஸ்வரி.

தல மரம்:

தீர்த்தம் : பிரம தீர்த்தம்.

வழிபட்டோர்:

Sthala Puranam

Specialities

  • இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.

     

  • பழமையான பெரிய கோயில்; உயர்ந்த ராஜ கோபுரத்தைக் கொண்டது.

     

  • நந்தியெம்பெருமான் சற்று பெரிய திருமேனி.

     

  • கோயிலுள்ளே தீர்த்தக் கிணறு உள்ளது. இஃது பிரம தீர்த்தம் எனப்படுகிறது.

     

  • இக்கோயிலுக்குரிய விசேஷ மூர்த்தியாக - நடராசப் பெருமான் மூலத் திருவுருவில் பேருருவில் அற்புதமாகக் காட்சியளிக்கின்றார். பக்கத்தில் சிவகாம சுந்தரி - இவர் சற்றுப் பார்வையைச் சாய்த்து சுவாமியைப் பார்ப்பது போன்ற அமைப்பு; காணக்கண் கோடி வேண்டும் அத்தனை அழகு.

     

  • இதுவன்றித் தனிச் சபையில் நடராசரும், சிவகாமியும் எழுந்தருளியுள்ளனர்.

     

  • வீரபத்திரர் சந்நிதி உள்ளது. பழைய நூலில் சுவாமியின் பெயர் 'சுந்தரவனேஸ்வரர்' என்றுள்ளது.

     

  • சுந்தரர் குருபூசை முதலிய சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

     

  • கல்வெட்டில் இவ்வூர் "ராஜராஜ வளநாட்டு ஊற்றத்தூர்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பாடாலூர் வந்து - 'புள்ளம்பாடி' சாலையில் 5 கி.மீ. சென்றால் "ஊட்டத்தூரை" அடையலாம்.

Related Content