logo

|

Home >

hindu-hub >

temples

இடைக்குளம் - (மருத்துவக்குடி) Idaikkulam - (Marutthuvakkudi)

இறைவர் திருப்பெயர்: ஐராவதேஸ்வரர்.

இறைவியார் திருப்பெயர்: அபிராமிநாயகி.

தல மரம்:

தீர்த்தம் : சந்திர புஷ்கரணி.

வழிபட்டோர்:ஐராவதம்

Sthala Puranam

  • மக்கள் வழக்கில் 'மருத்துவக்குடி' என்று வழங்குகிறது.

     

  • ஐராவதம் வழிபட்ட தலம்; ஐராவதம் வழிபட்டு பேறு பெற்றதனால் இறைவனுக்கு ஐராவதேசுவரர் என்று பெயர்.

  • வைப்புத்தலப் பாடல்கள்		: அப்பர் - நள்ளாறும் பழையாறுங் (6-71-10). 

Specialities

  • இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.

     

  • பெரிய சிவாலயம்; பழைமையானது, கற்றளி.

     

  • நந்தி - நீர் கட்டும் அகழி அமைப்பில் உள்ளது.

     

  • பிராகாரத்தில் - வரிசையாக நான்கு சிவலிங்க மூர்த்தங்கள் உள்ளன.

     

  • மூலவர் - சதுர ஆவுடையார்; சற்று கூரான பாணம்.

     

  • கோயில் கல்வெட்டில் இறைவன் பெயர் "உய்யக் கொண்டார் வளநாட்டு திரைமூர்நாட்டு....... திருஇடைக்குளமுடையார்" என்றுள்ளது.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு மயிலாடுதுறையிலிருந்தும், கும்பகோணத்திலிருந்தும் ஆடுதுறை வந்து - அங்கிருந்து ரயில்வே ரோடில் வந்து மருத்துவக்குடியை அடையலாம். 2 கி.மீ. தொலைவு.

Related Content