இறைவர் திருப்பெயர்: பட்டிப்பெருமான், பட்டீஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர்: பச்சைநாயகி, மரகதவல்லி
தல மரம்:
தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம், காஞ்சிமா நதி.
வழிபட்டோர்:காமதேனு, பட்டி
Sthala Puranam
சிவ லிங்கத்தின் தலையில், காமதேனு கன்றின் குழம்படி தழும்பை இப்போதும் காணலாம்.
பேரூர் நடராசப் பெருமானைத் தரிசித்த சுந்தரர், தில்லை சென்று வணங்கியபோது, அப்பெருமான் பேரூர்ப் பெருமானாகவே காட்சி தந்தார் என்பது வரலாறு.
நடராசர் அம்பலத்தில் எழுந்தருளியுள்ள அம்பலவாணப் பெருமான், கோமுனிக்கும் 'பட்டி'க்கும் ஆனந்த தாண்டவ தரிசனம் அருளிய பெருமானாவார்.
வைப்புத்தலப் பாடல்கள் : சம்பந்தர் - ஆரூர் தில்லையம் (2-039-1). அப்பர் - 1. சிந்தும் புனற்கெடில (6-07-10), 2. அஞ்சைக் களத்துள்ளார் (6-51-8), 3. ஆரூர்மூ லத்தானம் (6-70-2). சுந்தரர் - 1. ஆரூர் அத்தா ஐயாற் (7-47-4), 2. பாரூரும் அரவல்குல் (7-90-10)
Specialities
இத்தலத்திற்குக் காஞ்சிவாய்ப்பேர், மேலச்சிதம்பரம், இனாம்பேரூர், அரசம்பலம் என பெயர்கள் இருந்ததாகத் தெரிகிறது.
சிவாலயங்களில் ஆடும் நிலையில் உள்ள நடராஜரை தரிசிக்க முடியும்; ஆனால், ஆடி முடியப்போகும் நிலையில் நடராஜர் எப்படி இருப்பார் என்பதை இக்கோயிலில் காணலாம்.
இங்கு நடராஜரின் முகத்தில் குறும்பு பார்வை தெரிகிறது - மேடான கதுப்பு கன்னங்களும், பின்புறத்தில் தாழ் சடையும், ஆடி முடியப்போகும் நிலையில் கால்களும் தரையை நோக்கி மிகவும் தாழ்ந்துள்ளன.
இங்கே இறப்பவர்களின் காதில் இறைவன் "நமசிவாய' எனும் ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதி தன்னடியில் சேர்த்து கொள்வதால், இங்குள்ள மக்களை இறக்கும் தருவாயில், வலது காது மேலே இருக்கும் படியாக வைப்பர்.
பேரூர்த் தலத்திற்குறிய சிறப்புக்களாக எழும்பு கல்லாதல், இறவாப்பனை, பிறவாப்புளி - இதன் விதைகளை எங்கு போட்டாலும் முளைப்பதில்லை, திருநீற்றுமேடு, செம்பு பொன்னாதல், இறக்கும் உயிர்கள் வலச் செவியை மேல்வைத்து இறத்தல், இப்பகுதியில் உள்ள சாணத்தில் கூட புழுக்கள் உண்டாகாது போன்றச் சிறப்புச் செய்திகள் தலபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.
இங்குள்ள நடராசர் அம்பலம் - நடராச சபை, வேறெங்கும் காண முடியாத சிற்பக்கலை நுட்பங்கள் வாய்ந்தது. இம்மண்டபம் முழுவதுமே - ஒவ்வொரு பகுதியும் சிற்பக் கலையழகுடன் மிளிர்கின்றது. இச்சபை நாயக்க மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டதாகக் கல்வெட்டு வரலாறு கூறுகிறது.
கோயிலுக்கு எதிரே 16 வளைவுகளைக் கொண்ட திருக்குளம் மற்றும் இறவாப்பனையும், பிறவாப்புளியும் உள்ளது.
சிதம்பரத்திற்கு அடுத்தபடியாக இங்கு திருவாதிரை திருவிழா மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுவதால் இத்தலம் "மேலைச்சிதம்பரம்' என அழைக்கப்படுகிறது.
Contact Address