இறைவர் திருப்பெயர்: புஷ்பவனேஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர்: பாகம்பிரியாள்
தல மரம்:
தீர்த்தம் :
வழிபட்டோர்:
Sthala Puranam
அவல்பூந்துறை, பூந்துறை என்னும் இரு பெயர்களும் ஒன்றே. மக்கள் வழக்கில் பூந்துறை என்றே உள்ளது.
வைப்புத்தலப் பாடல்கள் : அப்பர் - கயிலாயமலை யெடுத்தான் (6-71-11).
Specialities
கொங்கு நாட்டின் இலக்கியச் சிறப்பில் பூந்துறை நாடு மிக்க புகழ்பெற்றது. "மேன்மைபெறு பூந்துறை" - "பொன் மேவும் பூந்துறை" - "பொன்னுலகோர் புகழ்ந்திடும் பூந்துறை" என்றெல்லாம் புலவர்கள் இத்தலத்தைப் புகழ்ந்துள்ளனர்.
இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.
பிரகாரத்தில் தான்தோன்றீஸ்வர லிங்கம், தர்மசம்வர்த்தனி முதலிய சந்நிதிகள் உள்ளன.
கோயில் வளாகத்துள் தென்னையும், பூச்செடிகளும் செழித்திருந்து பசுமையான சூழலைத் தருகின்றன.
யாத்திரையாக வருபவர்கள் தங்கி இளைப்பாற வசதியாக கோயிலில் பெரிய மண்டபம் உள்ளது.
காளியண்ணப் புலவர் என்பவர் பூந்துறைப் புராணம் பாடியுள்ளார்.
Contact Address